பிக்பாஸ் நிகழ்ச்சியில் சசிகலாவை சீண்டிய கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயிலெல்லாம் இருக்கு என போட்டுத் தாக்கினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயிலெல்லாம் இருக்கு என போட்டுத் தாக்கினார்.

விஜய் டிவி ஒளிப்பரப்பி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதன்படி இந்த வாரம் நடிகை நமீதா வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசனை சந்தித்த அவர் நிகழ்ச்சி அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும் சக போட்டியாளர்கள் குறித்தும் கருத்து கூறிய நமீதா, ஓவியா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

பிக்பாஸ் வீடு எப்படி?

பிக்பாஸ் வீடு எப்படி?

ஜூலியும் நமீதாவும் ஒரே படகில் பயணம் செய்வதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீடு எப்படி இருந்தது என நடிகர் கமல்ஹாசன் கேட்டார்.

வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில்

வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில்

அதற்கு பதிலளித்த நமீதா, பிக்பாஸ் வீடு ஒரு ஃவைவ் ஸ்டார் ஜெயில் என்றார். அதற்கு பதிலளித்த கமல் இது இல்லை.. ஆனால் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில்லாம் இருக்கு என்றார்.

சர்ச்சையில் சிக்கிய சசிகலா

சர்ச்சையில் சிக்கிய சசிகலா

அண்மையில் 5 அறைகள், செல்போன், ரோலிங் சேர், ஸ்பெஷல் கிட்சன் என பெங்களூரு சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளி சசிகலா ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த வீடியோக்களும், சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையிலிருந்து ஷாப்பிங் சென்ற வீடியோவும் வெளியானது.

சசியை சீண்டிய கமல்

சசியை சீண்டிய கமல்

இதனால் கர்நடாகா மற்றும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயில்லாம் இருக்கு என கூறியிருப்பது சசிகலாவின் சிறை ஆடம்பர வாழ்க்கையைத்தான் என கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+