TNPSC தேர்வு மையத்தால் வந்த குழப்பம்.. அனுமதி மறுப்பால் கதறி அழுத தேர்வர்கள்.. சீர்காழியில் ஷாக்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு குறிப்பிட்ட நேரத்தை விட தாமதமாக வந்ததாக கூறி 40க்கும் மேற்பட்டோருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு மையத்தால் வந்த குழப்பத்தால் தான் தாமதம் ஏற்பட்டதாக தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது.

தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு வளாகத்திற்குள் செல்ல வேண்டும் என்று தேர்வாணையம் அறிவுறுத்தி இருந்தது. இந்த தேர்வு 9.30 மணிக்கு ஆரம்பித்து 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்த தேர்வர்கள் தேர்வு எழுத அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து தேர்வெழுத முடியாத ஆத்திரத்தில் தேர்வர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களிலும் பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் குரூப் 4 தேர்வுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே விவேகானந்தா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மற்றும் விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் குட் சமரிட்டன் பள்ளி ஆகிய இரண்டும் ஒரே வளாகத்தில் இயங்கி வந்ததால், தேர்வு மையம் எதுவென்று தெரியாமல் தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதனால் 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. 9.30 மணிக்கு தொடங்கும் தேர்விற்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே தேர்வர்கள் 9.05 மணிக்கு வந்ததாக கூறி, அவர்களுக்கு தேர்வெழுத எழுத அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால் தேர்வு மையத்தால் தான் குழப்பம் ஏற்பட்டதாக கூறி தேர்வர்கள் முறையிட்டபோதிலும், சீர்காழி வட்டாட்சியர், அவர்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தேர்வர்கள் அந்த இடத்திலேயே தேர்வர்கள் கண்ணீர் விட்டுக் கதறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications