எந்த நேரத்திலும் வெளியாகலாம்... ஓவியா- ஆரவ் லிப் டு லிப் முத்தக் காட்சி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரிய வீட்டில் ஆரவையும் ஓவியாவையும் 'கோர்த்து'விட்டு, இப்போது பிரித்துவிட்டார் பிக் பாஸ். விளைவு மன அழுத்தத்தில் அழ ஆரம்பித்துவிட்டார் ஓவியா. தற்கொலைக்கும் முயன்று, 'கடவுள் புண்ணியத்தில்' பிழைத்துவிட்டார்.

'அய்யோ என்னை விட்ருங்க... நான் வெளிய போயிடறேன்' என்று கூறிவிட்டார் ஓவியா. வெளிய விடறதா... அம்மா தாயி.. உம் புண்ணியத்துலதான் டிஆர்பி தாறு மாறா போய்ட்டிருக்கு. வெளிய போயி வேட்டு வச்சிறாதே... திரும்ப உள்ள போயிடும்மா.. அடுத்து பிந்து மாதவி மாதிரி ஒருத்தரை டார்கெட் பண்ணிடறோம்,' என்று சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சேனல் தரப்பிலிருந்தே ஒரு செய்தி கசிய விடப்பட்டுள்ளது.

முன்பு ஆரவைப் பார்த்து ஓவியா, 'அப்ப ஏன் கிஸ் பண்ண?' என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருந்தார் அல்லவா... அது சாதா கிஸ் இல்லையாம். லிப் டு லிப் கிஸ்ஸாம்.

இந்த முத்தக் காட்சியை கமல் அடிக்கடி காட்டுவாரே ஒரு 'குறும்படம்', அந்த மாதிரி ஓட்டிக் காட்டப் போகிறார்களாம். அநேகமாக இன்றோ நாளையோ இந்த குறும்படம் ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.

'ஒண்ணும் தெரியாத பச்ச மண்ணுக்கு லிப் டு லிப்பா கொடுத்தே.. மவனே நீ காலி...' என கிளம்பியிருக்கிறார்கள் ஓவியா ஆர்மிகாரர்கள். வெளிய வரும்போது சேஃபா இருந்துக்க ஆரவ்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Big boss producers are planning to telecast the short film of Oviya - Arav lip lock scene
Please Wait while comments are loading...