தீபாவளிக்கு களை கட்டுகிறது ஓவியா சேலை!
தீபாவளி பண்டிகைக்கு பெண்களுக்கு பிடித்த வகையில் ஓவியா புடவைகள், அனைத்து கடைகளிலும் விற்பனைக்கு வைக்கபப்ட்டுள்ளது. மக்களும் இதை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு பெண்களுக்கு என பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்ப்ட்டுள்ளது ஓவியா சாரி. இளம் பெண்கள் முதல் நடுத்தர வயதுபெண்கள் வரை ஓவியா புடவைகளை அள்ளிச் செல்கின்றனர்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் அணுகுமுறை, நேர்பட பேசுதல் என அவரது குணத்துக்கு பலரும் ரசிகர்களாகிவிட்டனர்.
தற்போது அனைத்து கடைகளிலும் தீபாவளிப் பண்டிகைக்கு 'ஓவியா சாரீஸ்' என்ற புது ட்ரெண்ட் சேலை அமோகமாக விற்பனையாகி வருகிறது.

அப்போ நதியா இப்போ ஓவியா
1990களில் நதியா கம்மல், நதியா பாவாடை என நடிகைகளின் பெயரில் ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது பிக்பாஸ் புகழ் ஓவியா வரை நீடிக்கிறது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா அதிக நாட்கள் அரை ட்ரவுசர் தான் அணிந்திருந்தார்.

புடவையின் விலை
பிளைன் பார்டர் லேசர், ஷிபான் மெட்டீரியலில் பல வண்ணங்களிலும் வந்துள்ளது ஓவியா சாரி. இதற்கு ஸ்டோன்ஸ் பதித்த பிளவுஸ் தான் மேட்சிங் பிளவுஸ். இந்த புடவை ரூபாய் 1600க்கு ஆரம்பித்து 10,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு புது வரவு
vகாட்டன் புடவையில் செந்துரா பட்டு பார்டர் சேலை இந்த தீபாவளிக்கு புதுவரவு. அதுமட்டுமில்லாமல் பனாரஸ் பட்டு ரகத்தில் லெஹங்கா தாவணி கலெக்ஷன்ஸ் இளம் பெண்களின் மனதை கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சி பட்டு
டபெட்டா சில்க்ஸ் என்ற புதுரக பட்டில் அனார்கலி சுடிதார் களை கட்டுகிறது. இதுமட்டுமில்லாமல் காஞ்சி பட்டில் ட்ரை கலர் சாப்ஃட் சில்க் புடவை அனைத்து பெண்களுக்கும் பிடித்த வண்ணம் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பல வண்ண புடவைகள்
குறைந்த பட்சம் 6,000 ரூபாயில் இந்த ட்ரை கலர் சாஃப்ட் சில்க் புடவையின் விலை ஆரம்பிக்கிறது. அவரவர் பட்ஜெட்டுக்கும் பர்ஸுக்கும் ஏற்ற விலையில் இருக்கிறது டிசைனர் சாரீஸ். பிளைன் சாரியும் அதற்கு பெங்களூரி பிளவுஸ் தான் இந்த வருடம் அனைவருக்கும் பிடித்த சேலையாக இருக்கும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications