திருச்சி அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சிலிண்டர் வெடித்தது- 3 குழந்தைகள் காயம்
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் சிகிச்சைக்காக வைக்கப் பட்டிருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்று, அழுத்தம் தாங்காமல் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், அங்கிருந்த கண்ணாடி உள்பட பல பொருட்கள் வெடித்து சிதறின. சிலிண்டர் வெடித்ததில் பயந்து போன மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர்.

இந்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். வாயு கசிந்த போதே முன்னெச்சரிக்கையாக பெற்றோர் பலர் தங்களது குழந்தைகளுடன் அங்கிருந்து வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப் பட்டது.
சிலிண்டர் வெடித்த விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications