சிறையில் இருக்க வேண்டியவர் ப.சிதம்பரம்.. 18 நாடுகளில் சொத்து சேர்த்துள்ளார்: சு.சாமி பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகள், அலுவலகங்களில் சிபிஐ இன்று ரெய்டுகள் நடத்திய சூழ்நிலையில், பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

சு.சுவாமி கூறியதாவது: உலக வரலாற்றிலேயே காங்கிரஸ்தான் ஊழல் கட்சி. இந்து தீவிரவாதம் என்று கூறி தீவிரவாத வழக்குகளை திசை திருப்பியவர் சிதம்பரம்.

P Chidambaram has to be in the jail, says BJP MP Subramanian Swamy

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பை, லஷ்கர் இ தொய்பா நிகழ்த்தவில்லை என்றும், இந்து குரூப் செய்ததாகவும் கூறியவர்தான் ப.சிதம்பரம். அவர் ஒரு மோசடி நபர், பொய்யர். அவர் சிறையில் இருக்க வேண்டியவர்.

வெளிநாட்டு முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட முதலீடுகளில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேடாக சிதம்பரம் அனுமதி வழங்கியதும், அவரது மகன் கார்த்தி, சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் பணம் பெறுவது வாடிக்கையாக இருந்துள்ளது. ப.சிதம்பரத்திற்கு 18 நாடுகளில் வங்கி கணக்கு, சொத்துக்கள் உள்ளன. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Union Minister P Chidambaram has to be in the jail, says BJP MP Subramanian Swamy.
Please Wait while comments are loading...