சென்னையில் கார் விபத்தில் சிக்கிய ப.சிதம்பரம்.. காயமின்றித் தப்பினார்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்ற கார் இன்று காலை சென்னையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ப.சிதம்பரத்திற்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் இன்று காலை டெல்லி செல்வதற்காக கார் மூலம் விமான நிலையம் புறப்பட்டார். கிண்டி கவர்னர் மாளிகை அருகே சென்ற போது, சிக்னலுக்காக ப.சிதம்பரத்தின் கார் நின்றது.

அப்போது அவருடன் வந்த பாதுகாப்பு போலீசாரின் கார் மீது பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. இதனால், பாதுகாப்பு போலீசாரின் கார் ப.சிதம்பரம் பயணம் செய்த காரின் பின்பகுதியில் மோதியது. இதில் ப.சிதம்பரத்தின் காரில் பின்பக்க விளக்கு உடைந்து கண்ணாடி நொறுங்கியது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ப.சிதம்பரத்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பாதுகாப்பு போலீசாரின் கார் சேதம் அடைந்தது. அதில் இருந்த 3 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக காரில் இருந்து இறங்கிய ப.சிதம்பரம், காயமடைந்த போலீசாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், விமான நிலையம் சென்ற ப.சிதம்பரம் டெல்லி புறப்பட்டார்.
சிக்னலில் விபத்தை ஏற்படுத்திய காரில் 5 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் இருந்து சைதாப்பேட்டை வந்தபோது இந்த விபத்து நடந்தது.
காயம் அடைந்தவர்கள் குரோம்பேட்டை பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications