அமைச்சர்களையும், ரிசர்வ் வங்கி இயக்குநர்களையும் செல்போனை பறித்து 'சிறை' பிடித்த மோடி: ப.சிதம்பரம்
நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக மத்திய அமைச்சர்களும், ரிசர்வ் வங்கி இயக்குநர்களும் ஆங்காங்கு சிறை வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார் ப.சிதம்பரம்.
சென்னை: பண மதிப்பிழப்பு முடிவை மோடி அறிவித்த தினம், மத்திய அமைச்சர்களும், ரிசர்வ் வங்கி இயக்குநர்களும 'சிறை' வைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் அக்கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.
அவர் மத்திய அரசின் நடவடிக்கையை விளாசினார். சிதம்பரம் பேசுகையில், நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, பண மதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், ஏற்கனவே பேசியும், எழுதியும் வைத்த, தயாரித்து வைத்த காகிதங்களை அமைச்சரவை ஏற்றுக்கொள்வதைப்போல ஏற்றுக்கொண்டு, பரிந்துரை செய்வதைப்போல பரிந்துரை செய்து, அரை மணி நேரத்தில் அமைச்சரவை கூட்டம் முடிவடைந்தது.

சிறை பிடிப்பு
அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது என்ற தோற்றத்தை உருவாக்க இந்த நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. கேபினட் கூட்டம் முடிந்ததும், அனைத்து அமைச்சர்களும் அங்கேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர். யாரும் வெளியே போகக் கூடாது என கூறி, அனைத்து அமைச்சர்களின் மொபைல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காரணம் என்ன
ஒரு நாட்டில் இவ்வளவு பெரிய முடிவை, இவ்வளவு மோசமான முறையில் எடுத்ததாக உலகத்தில் வரலாறே கிடையாது. கடந்த 50 ஆண்டுகளிலே எந்த பெரிய பொருளாதாரத்திலே இதைப்போன்று பணமதிப்பிழப்பு செய்திருக்கிறார்கள் என்று கூற முடியுமா. பணவீக்கம் (விலையேற்றம்) கட்டுக்கு மீறி போய்விட்டால் அந்தப் பணத்திற்கு மதிப்பு கிடையாது என அறிவிக்கலாம். அல்லது பணம் ஸ்திரத்தன்மையை இழந்துவிட்டது என்றாலும் அறிவிக்கலாம். இது டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பை வைத்து தீர்மானிக்கப்படுவது.

நல்லாத்தானே இருக்கிறது
ஆனால், இந்திய ரூபாய் ஸ்திரத்தன்மையை இழக்கவில்லை. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 67 அல்லதலு 68 என்ற அளவில் ஸ்திரமாகத்தான் இருக்கிறது. இந்தியாவின் பணவீக்கம் உயரவும் இல்லை. இந்தியாவின் பணவீக்கம் 5 முதல் ஐந்தேகால் சதவீதம் என நிலையாகத்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் பணம் செல்லாது என்று அறிவித்ததற்கு என்ன காரணம் என்பதை ரிசர்வ் வங்கி இதுவரை கூறவில்லை.

விலைகளில் வீழ்ச்சி
மோடியின் திடீர் அறிவிப்பால் நவம்பர் 8ம் தேதியிலிருந்து இன்றைய தேதிக்குள், நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தக்காளி ஒரு குவிண்டால் 2659 ரூபாய் வீழ்ச்சியடைந்தது 1920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உருளைக்கிழங்கு 1400ல் இருந்து 924 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதுபோன்ற விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications