மதுரை மத்தி தொகுதியில் களம் இறங்கும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன்
மதுரை: திமுக சார்பில் மதுரை மத்தி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன்.
பன்முகத் தன்மை கொண்ட பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் திமுக-வின் முன்னணி தலைவர்களில் ஒருவராகத் திகழந்த மறைந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் மகன். இவர் பள்ளிப்படிப்பை மதுரையில் பயின்றார். பின்னர் பி.டெக் கெமிக்கல் என்ஜினியரிங், என்ஐடி திருச்சியில் பயின்றார்.

ஆராய்ச்சி பட்டம், எம்பிஏ பட்டம் பெற்ற பழனிவேல் தியாகராசன், நியூயார்க் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர், உலக முன்னணி நிறுவனங்களின் நிதி ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பு வகித்தவர்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய அளவில் நடைபெற்ற விஞ்ஞானக் கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எர்கோனாமிக்ஸ் தொடர்பான சர்வதேச தர ஆணையத்தின் உறுப்பினராக இருந்தவர். அமெரிக்காவில் தனது படைப்புகளுக்காக காப்புரிமை பெற்றவர். தற்போது அரசியலுக்குள் களம் புகுந்துள்ளார்.
அமெரிக்க-ஐரோப்பிய-ஆசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்களில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ள தியாகராசன், பணிச்சூழலியல் துறையில் (எர்கோனமிக்ஸ்) சர்வதேச தர ஆணையத்தில் உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார்.
1957-ம் ஆண்டு முதல் ஒரு இடைத்தேர்தல் உட்பட இதுவரை 14 தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 4 முறையும், திமுக 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2 முறையும், அதிமுக, திமுக, சுயேட்சை வேட்பாளர் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் (திமுக) வெற்றி பெற்றார். அவர் மறைவை தொடர்ந்து அதே ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கவுஸ்பாட்ஷா (திமுக) வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் ஆர்.சுந்தர்ராஜன்(தேமுதிக) அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் கல்வியாளரான பிடிஆர். பழனிவேல் தியாகராசனை திமுக களமிறக்குகிறது.












Click it and Unblock the Notifications