'கபாலி' நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி மீண்டும் ரஜினியுடன் இணையும் பா.ரஞ்சித்!
சென்னை: 'கபாலி' எதிர்மறை விமர்சனங்களை தாண்டி மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இயக்குநர் பா.ரஞ்சித் இணைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த படம் கபாலி. உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் கபாலி படம் பலத்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியிருந்தது. ஆனால், படம் வெளியான பின், இப்படம் ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் இல்லை என்றும், வழக்கமான ரஜினி படத்தில் இருக்கும் காட்சி அமைப்புகள் இதில் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தது.
தமிழகத்திலும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் அளவில் பெரும் சாதனை செய்ததை யாராலும் மறுக்க முடியாது. அதேசமயம், கபாலி திரைப்படம் தலித் திரைப்படம் என்றும், பிற சமூகத்தினரை சீண்டும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், தலித் சமுதாயம் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் பற்றி தன்னுடைய கோபத்தை, இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித், ரஜினிகாந்த் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் என்றும் விமர்சிக்கப்பட்டது. விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தவர்கள் படம் நல்லாத் தானே இருக்கு ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என கேட்டது உண்டு.
Magizchi!!!! https://t.co/ou9tuw1tc5
— pa.ranjith (@beemji) August 29, 2016
இதுதான் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அடுத்த படத்தை இயக்க ரஞ்சித்தை ஊக்கப்படுத்தியுள்ளது. அதேசமயம், கபாலி என்ற வித்தியாசமான கதை மூலம் ரஜினியின் நடிப்பு வரலாற்றில் புதிய சகாப்தத்தை உண்டாக்கிய ரஞ்சித் இந்த முறை ரஜினியை வைத்து எந்த மாதிரி கதைக் களத்தைத் உருவாக்கப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பும், ஆர்வமும் அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications