நேரு மகனை அசால்ட்டாக டீல் செய்யும் பாரிவேந்தர்! அடித்துப் பேசும் நித்தியானந்தம்
ஒரு காலத்தில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி நின்று வெற்றி பெற்ற தொகுதியான குளித்தலை பெரம்பலூர் தொகுதிக்குள்ளாகவே வருகின்றது. அப்படி ஒரு பாரம்பரியம் கொண்ட தொகுதியான இந்தப் பெரம்பலூரில் மூன்றாவது முறையாகக் களம் கண்டுள்ளார் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்.
இதுவரை 17 பொதுத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது பெரம்பலூர். அதில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 6 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

திராவிட இயக்க தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரான இரா. செழியன் இந்தத் தொகுதியில் 1962இல் போட்டியிட்டு மக்களவைக்குச் சென்றவர்களில் மிக முக்கியமானவராவார்.
அதேபோல் 2009இல் திமுக சார்பில் நடிகர் நெப்போலியன் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார். ஆ.ராசா 3 முறை வென்ற தொகுதியும் இதுதான். இவருக்கு இணையாக அதிமுக அசோக் ராஜ் 3 முறை வென்றுள்ளார்.
ஐஜேகே கட்சியைத் தொடங்கியது முதல், பாரிவேந்தர் மொத்தம் 3 முறை இந்தத் தொகுதியில் வேட்பாளராகக் களம் கண்டுள்ளார். அதில் 2019இல் 6.84 லட்சம் வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியடைந்தார்.
இந்தமுறை பாரிவேந்தர் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதற்காகப் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியான முசிறி, குளித்தலை, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், பெரம்பலூரில் முகாமிட்டு கூட்டணி கட்சியினரின் உதவியுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பெரம்பலூரில் பாரிவேந்தரின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது. அது பற்றி நித்தியானந்தம், "முதலில் நாம் பாரிவேந்தர் பின்னணியைப் பார்க்க வேண்டும். அவர் சாதாரண நிலையிலிருந்து தனது அயராத முயற்சியால் முன்னேறி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.
அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் யார்? அமைச்சரின் மகன். அவருக்கு என்று ஏதேனும் பின்னணி உள்ளதா? என்றால் இல்லை. அவருடைய தந்தை கே.என்.நேருவின் செல்வாக்கில் தேர்தலைச் சந்திக்கிறார்.
இவருக்கு என்று தனியான செல்வாக்கோ சாதனையோ இல்லை. அதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அமைச்சராக உள்ள இவரது தந்தையே இதுவரை பெரம்பலூருக்காக என்ன செய்திருக்கிறார் என்பது மிகப் பெரிய கேள்வி.
ஆனால், பாரிவேந்தர் அப்படி அல்ல. அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல சேவைகளைச் செய்துள்ளார். அதன் பிறகு பெரம்பலூர் தொகுதி எம்பியாக பல நல்ல காரியங்களைச் செய்து கொடுத்துள்ளார்.
எப்படி என சிலர் கேட்கலாம்? பாரிவேந்தர் 100 அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, வகுப்பறைக் கட்டுவது, கணினி அறை கட்டுவது என இதுவரை 10 லட்ச ரூபாய் நிதியைத் தனது அறக்கட்டளை மூலம் செலவு செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள வேறு எந்த வேட்பாளர் இவரைப் போல உதவி செய்துள்ளார்கள் எனச் சொல்லுங்கள் பார்ப்போம்.
இது ஏதோ தேர்தலுக்காக அவர் செய்யவில்லை. வெற்றி பெற்ற பிறகு 5 ஆண்டுகளாகத் தனது தொகுதி மக்களுக்காக அவர் செய்த சிறிய நிதி உதவி இது. இதைப் போலக் கடந்த 5 ஆண்டுகளில் தனது அறக்கட்டளை மூலம் 126 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத் திட்டங்களுக்காக அவர் செலவு செய்திருக்கிறார்.

இவரிடம் பெரம்பலூர் தொகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளதாக மாவட்ட ஆட்சியர் முறையிடுகிறார். இவர் மாநிலத்தை ஆட்சி செய்யும் ஆளும் கட்சி அல்ல. ஆனாலும் உடனடியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஆர்.ஓ. சிஸ்டம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
தொட்டியம் மற்றும் நத்தம் ஆகிய கிராமத்திற்கு இடையே சாலை வசதி சரியில்லை என மக்கள் இவரிடம் முறையிட்டுள்ளார்கள். அதற்கு அரசு நிதி வரட்டும் என்று அவர் சொல்லவில்லை. உடனடியாக தன் நிறுவனத்தின் நிதியிலிருந்து 3 லட்ச ரூபாயைச் செலவழித்து சாலை போட்டுக் கொடுத்துள்ளார் பாரிவேந்தர்.
நான் கேட்கிறேன்? எந்த திமுக அமைச்சர்களாவது தங்களின் சொந்த நிதியிலிருந்து ஒரு கிராமத்திற்காவது சாலை போட்டுக் கொடுத்தது உண்டா? திமுக அமைச்சர்களும் கோடி கோடியாகச் சம்பாதிக்கிறார்கள். அவர்களும் இவரைப் போலச் செலவு செய்யலாமே? ஏன் செய்யவில்லை? இதை எல்லாம் மக்கள் யோசிக்க வேண்டும்.
தனது தொகுதிக்கு உட்பட்ட லால்குடி கிராமத்தில் உள்ள திண்ணியத்தில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி செய்திருக்கிறார். இதை எல்லாம் அவர் விளம்பரமே இல்லாமல் செய்துள்ளார்.
அவர் இதுவரை இந்த உதவிகளைப் பற்றி பத்திரிகைகளில் ஊடகங்களில் பேசியதில்லை. வெளிப்படுத்தியதில்லை. தனது தொகுதிகள் தெரிந்து கொள்வதற்காக இப்போது அவர் இந்தத் துண்டறிக்கையைத் தந்துவிட்டு தைரியமாக ஓட்டுக் கேட்டு வருகிறார்.
இந்த 5 ஆண்டு காலத்தில் அவர், மனிதர்களுக்கு மட்டுமல்ல; மனித ஜீவன்களைக் கடந்து சிறப்பான ஒரு காரியத்தைச் செய்துள்ளார். பெரம்பலூரைப் பகுதியைச் சுற்றி மலைகள் உள்ளன. ஆகவே மலை அடிவாரத்தில் மக்கள் முயல் வேட்டை செய்வது வழக்கம். அது வனவிலங்கு சட்டத்தின் படி குற்றமாக இருந்து வந்தது.
நாட்டு நாய்கள், முயல்கள் இதுவரை வனவிலங்குப் பட்டியலில்தான் இருந்து வந்தன. அதை போராடி மாற்றி இருக்கிறார் பாரிவேந்தர். வனவிலங்குப் பட்டியலிலிருந்து அவற்றை நீக்க நடவடிக்கை எடுத்து வெற்றியும் பெற்றுள்ளார்.
கடந்த முறை அவர் திமுக கூட்டணியிலிருந்தார். இப்போது பாஜகவுக்கு வந்துள்ளார் எனச் சிலர் சொல்லலாம். அவர் அதற்கு முன்பாகவே பாஜக கூட்டணியில் 2014இல் போட்டியிட்டு 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அன்றைக்கு பாஜக வலுவாக இல்லை. அப்போதே அந்த அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளார் பாரிவேந்தர். 2019இல் மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார் என்று ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதை மக்கள் நம்பி வாக்களித்தனர். ஆனால், மோடி தான் மீண்டும் பிரதமராக வந்தார்.
ஸ்டாலின் பேச்சு உண்மை இல்லை என்று பிறகு மக்கள் உணர்ந்தார்கள். அப்போதுதான் பாரிவேந்தர் அணி மாறினார். அவர் மட்டுமா அணி மாறினார்? அணி மாறாத கட்சிகள் எவை?
திமுக கூடத்தான் பாஜக அணியிலிருந்தது. அந்தக் கட்சி அணி மாறவில்லையா? அதைப் போல வெற்றி வியூகத்தின் அடிப்படையில், பாரிவேந்தர் தேர்தல் நேரத்தில் அணி மாறினார். அது இயற்கையான ஒன்றுதான்.
அவர் அணி மாறினார் என்பது முக்கியமல்ல. அவர் தொகுதிக்கு என்ன செய்தார் என்பதுதான் முக்கியம். அவர் பெரம்பலூருக்குப் பல உதவிகளைச் செய்திருக்கிறார். அவரது வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது.
அவரை எதிர்த்துப் போட்டியிடும் அமைச்சர் மகனுக்கு இந்தப் பின்னணிகள் கிடையாது. வெறும் அமைச்சர் மகன் என்பதற்காக மக்கள் ஓட்டுப் போட்டால் ஏமாந்து போவார்கள். இன்று கிடைத்தது கூட வருங்காலத்தில் கிடைக்காமல் போய்விடும்.
ஆகவே, தொகுதிக்காக தன் பணத்தைச் செலவிடுபவரை விட்டுவிட்டு, மக்கள் பணத்தில் ஊழல் செய்பவரைத் தேர்ந்தெடுக்கப் பெரம்பலூர் மக்கள் தயாராக இல்லை. அதை நான் களத்தில் போய் பார்த்துவிட்டு வந்த பிறகுதான் சொல்கிறேன்" என்கிறார்
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications