மாரியப்பன், சுனிதா சாலமன், டி.கே. மூர்த்தி உட்பட 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்
சென்னை: நாட்டின் மதிப்பு மிக்க உயரிய விருதான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 75 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல்:

தமிழகத்தில் 5 பேருக்கு பத்ம ஸ்ரீ
பாரலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன். ரியோவில் நடைபெற்ற பாரலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சுனிதி சாலமன். இந்தியாவில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை முதன் முதலில் கண்டறிந்தவர் டாக்டர் சுனிதி சாலமன்,74. சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றியவர். இவர் 2015ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.
தமிழகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் டி.கே. மூர்த்தி, பேராசிரியர் மைக்கேல் டானினோ,சமூக சேவகி நிவேதிதா ரகுநாத் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

களறி பயிற்சியாளர்
கேரளாவை சேர்ந்த களறி பயிற்சியாளர் மீனாட்சி அம்மா. தன் வாழ்க்கையையே களறிக்காக அர்ப்பணித்தவர். வயதான பின்னரும் வாள் சுழற்றும் இவருக்கு பத்ம ஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம ஸ்ரீ பெறும் விளையாட்டு வீரர்கள்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பாராலிம்பிக் வீரர் மாரியப்பன், ரியோ ஒலிம்பிக்கில் நான்காம் இடம் பிடித்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், பார்வையற்றோர் அணியின் கேப்டன் சேகர் நாயக், ஹாக்கி கேப்டன் ஸ்ரீஜேஷ், வட்டு எறியும் வீரர் விகாஸ் கெளடா போன்றோர் பத்மஸ்ரீ விருதைப் பெறவுள்ளார்கள்.

சமூக ஆர்வலர்கள் கலைஞர்கள்
சமூக சேவகி அனுராதா கொய்ராலா, மபூஷ்கர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபல், எழுத்தாளர் இலி அகமது, நடிகர் சாது மேகர், சண்டிகர் பேராசிரியர் ஹர்கிஷன் சிங். திரைப்பட பின்னணி பாடகி அனுராதா படுவால், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications