பாலமேடு ஜல்லிக்கட்டு.. சீறிப் பாய்ந்த காளைகளை பிடித்து அசத்திய காளையர்களுக்கு குவிந்த பரிசுகள்
இன்று தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. சீறிப் பாய்ந்த 354 காளைகளை பிடித்த இளைஞர்களுக்கு பரிசுகள் குவிந்தன.
மதுரை: இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு முடிவடைந்தது. இதில் பங்கேற்க 850 காளைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 354 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. இதில் காளை அடக்க பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் காளை அடக்கி பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர்கள் புரட்சிக் காரணமாக தமிழக அரசு குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டசபையில் சட்டம் இயற்றியது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழிலிலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து அவனியாபுரத்தில் கடந்த 5 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து முடிந்தன.

இதனைத் தொடர்ந்து, இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற முடிவு செய்யப்பட்டு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளான வாடிவாசல் அலங்கரிப்பு, பார்வையாளர் மேடையமைப்பு, இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 850 காளைகளுக்கும், 1,607 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதிச் சீட்டும் வழங்கப்பட்டது.
இன்று காலையில் மாடுகளுக்கு கால் நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 9 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. மாலை 4 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 354 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று கோரி போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அவர்களுக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் தென்மண்டல காவல்துறை தலைவர் எஸ்.முருகன் தலைமையில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், 50-க்கும் மேற்பட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் உள்பட 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஜல்லிக்கட்டின் நிறைவாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கிய மாடுபிடி இளைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், நன்றி தெரிவித்து விழாவை முடித்து வைத்தார்.
நாளை உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் அங்கும் அதற்கான ஏற்பாடுகள் ஜோராக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications