அண்ணாச்சிக்கு நட்டு கழன்டுருச்சு'... குட்டி சுட்டீஸை சுனாமியாய்க் கலக்கிய "சுள்ளான்" தனுஷ்!
சென்னை: குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே முதல் முறையாக அனைவரையும் கலாய்க்கும் இமான் அண்ணாச்சியை ஒரு குட்டிப் பையன் செமையாக கலாய்த்து விட்டான். அதை விட தனது குடும்பத்தினரை அவன் போட்டு வாங்கி வறுத்தெடுத்தது அனைவரையும் அதிர வைத்தது.
எவனா இருந்தா எனக்கென்ன என்பது போல கிடைத்ததையெல்லாம் வார்த்தையால் நொறுக்கி அள்ளிய அந்தப் பையனின் சுட்டித் தனம் அனைவரையும் கவர்ந்திழுந்து விட்டது.
நேற்றைய குட்டி சுட்டீஸின் ஹைலேட்டே இந்தப் பொடியன்தான். அப்படி ஒரு விறுவிறு.. சுறுசுறு...

குட்டி சுட்டீஸ்
குட்டீஸ்களின் மழலைப் பேச்சு, சமயோஜிதம், புத்திசாலித்தனம் என அனைத்தையும் வெளியில் கொண்டு வரும் நிகழ்ச்சிதான் இமான் அண்ணாச்சி நடத்தும் இந்த குட்டி சுட்டீஸ்.

வில்லங்கப் பேச்சும்
ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து அதே விறுவிறுப்புடன் இந்த நிகழ்ச்சி போய்க் கொண்டுள்ளது. இடை இடையே சிறார்களிடம் இப்படியெல்லாம கேப்பாங்க அண்ணாச்சி என்ற சர்ச்சைகள் எழுந்த போதும்.

பல்லாவரம் தனுஷ்
இந்த நிலையில் நேற்றைய குட்டி சுட்டீஸ்தான் தமிழகம் முழுக்க பரபரப்பாக பார்க்கப்பட்டதாக இருக்கும். காரணம், பல்லாவரம் தனுஷ் என்ற குட்டிப் பையன் அடித்த லூட்டிதான்.

எடக்கு மடக்கு
அண்ணாச்சி கேட்ட கேள்விக்கெல்லாம் எடக்க மடக்கான பதிலைக் கொடுத்து அவரையே திகிலடிக்க வைத்து விட்டான் இந்தப் பையன்.

கண்ணு தெரியலையே
அண்ணாச்சி கேட்ட கேள்விக்கெல்லாம் எகத்தாளம் பொதிந்த பதில்கள்தான் பையனின் வாயிலிருந்து வந்தது. கையை நீட்டு என்று அண்ணாச்சி கூறியபோது கையை நீட்டி விட்டு என்ன தெரியலையா என்று கேட்டு ரகளை செய்தான்.

எப்பப் பாரு கீரை, சாம்பாரு
என்ன சாப்பாடு சாப்பிடுவே என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல் சிக்கனு, மட்டனு, பிஷ்ஷு, பிரான் எத்தனை இருக்கு. அதை விட்டுட்டு எப்பப் பாரு சாம்பாரு. கீரை... என்று அடித்தானே ஒரு அடி!

தாத்தாவுக்கு மரியாதை
அதை தனது தாத்தாவை அவன் அறிமுகம் செய்த விதம்தான் செம.. அந்தா இருக்காரு பாரு, மொட்டைத் தலையோட, நெத்தியில் விபூதி பூசிக்கிட்டு அவருதான் தாத்தா என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது. தாத்தாவும் சிரிப்பை அடக்க முடியாமல் தத்தளித்தார்.

அண்ணாச்சிக்கு நட்டு கழன்டுருச்சு
கடையசியாக அவனிடம் அண்ணாச்சி ஒரு கேள்வி கேட்க, இப்ப அண்ணாச்சிக்கு நட்டு கழன்டுருச்சு என்று அவன் சொன்னதுதான் போதும்.. இத்தோடு இன்றைய நிகழ்ச்சியை முடிக்கலாம் என்று கூறி அண்ணாச்சி ஜகா வாங்கினார்.
டேய்.. தம்ப்ரி.. நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவடா செல்லம்!
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications