மாணவிகள் மரணத்திற்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்... உறவினர்கள் திடீர் சாலைமறியல்!
அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Recommended Video

பனப்பாக்கம் : கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகள் விவகாரத்தில் ஆசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மாணவிகளின் உடல்களை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதிப்பெண் குறைவாக எடுத்ததால் ஆசிரியர் தரக்குறைவாக திடிட்டியதோடு, பெற்றோரையும் அழைத்து வரச்சொன்னதில் மனமுடைந்த 4 மாணவிகள் அரக்கோணம் அருகே உள்ள ராமாபுரத்தில் இருந்த விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். பனப்பாக்கத்தைச் சேர்ந்த தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி ஆகிய நான்கு மாணவிகளும் ராமாபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்புப்படித்து வந்துள்ளனர்.

மாணவிகளின் இந்த விபரீத முடிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இறந்த மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்து மாணவிகளின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் உடல்களை வாங்க மறுத்து பனப்பாக்கம் பகுதியில் மாணவிகளின் உறவினர்களும், பொதுமக்களும் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவிகளின் மரணத்திற்கு ஆறுதல் சொன்ன ஆசிரியை மீனாட்சி மீது நடவடிக்கை எடுத்தவர்கள் லல்லி என்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறப்படுகிறது. மேலும் மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனையடுத்து மாணவர்களின் உடல் வைத்திருந்த ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் வழிவிட்டனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications