தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சராகிறார் மஃபா பாண்டியராஜன்
தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல்துறை அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video

அதிமுகவின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ளன. இதனையடுத்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

துணை முதல்வராகிறார் ஓ.பன்னீர் செல்வம். நிதித்துறை அமைச்சராக ஓ.பன்னீர் செல்வம்
வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன் கால்நடைத்துறை அமைச்சராக நியமனம்.
மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல்துறை அமைச்சராக நியமனம்.
.@mafoikprajan தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சராகிறார் மஃபா பாண்டியராஜன் pic.twitter.com/zBSIm7vhyx
— Oneindia Tamil (@thatsTamil) August 21, 2017
செங்கோட்டையன், சேவூர் ராமச்சந்திரனிடம் இருந்த பொறுப்புகள் மாஃபா பாண்டியராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.
செங்கோட்டையன் இனி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மட்டுமே பொறுப்பு வகிப்பார்.
பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பிளவு படும் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் மாஃபா பாண்டியராஜன். அமைச்சர் பதவியை விட்டு விட்டுதான் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார் பாண்டியராஜன். புதிய அமைச்சரவையில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications