குண்டுக் காயத்திலிருந்து குணமடைந்த பன்னா இஸ்மாயில் சிறையில் அடைப்பு

சேலம் ஆடிட்டர் ரமேஷ் உள்பட சில பாஜக பிரமுகர்கள் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக்கை போலீஸ் படையினர், ஆந்திர மாநிலம் புத்தூரில் வைத்து பெரும் சண்டைக்குப் பின்னர் கைது செய்தனர்.
இதில் இஸ்மாயிலுக்கு குண்டுக் காயம் ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அவரது உடலுக்குள் பாய்ந்த குண்டை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் அவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது குண்டு எடுக்கப்பட்டு விட்டதால் அவரது உயிருக்கு இருந்து வந்த ஆபத்து நீங்கியது.
இதையடுத்து இஸ்மாயிலை தற்போது புழல் மத்திய சிறைக்கு மாற்றியுள்ளனர். அங்குள்ள மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்மாயிலை சந்திக்க அவரது மனைவி சிறைக்கு வந்தபோது அவருக்கு சிறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை.












Click it and Unblock the Notifications