ஜெ.வை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்!

தமிழக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுகவில் இணைந்தார். பின்னர் போட்டி அதிமுக, பாமக, தனிக் கட்சியெல்லாம் கண்டு கடைசியில் தேமுதிகவில் இணைந்தார்.
தேமுதிகவில் கட்சியின் அவைத்தலைவராகவும் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். அண்மையில் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கையோடு தேமுதிகவில் இருந்து விலகியதுடன் "தீவிர' அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அறிவித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
ஆனால் அவர் அல்லது அவரது மகன் அதிமுகவில் இணையப் போகிறார் என்று அப்போது செய்திகள் வெளியாகின. அதை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்த நிலையில் திடீரென பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசின் "அண்ணா விருது", முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது.
பின்னர் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்த பேட்டிகளில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என்று கூறிவந்தார். இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அண்ணா திமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக தெரிவித்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications