பண்ருட்டி ராமச்சந்ந்திரனை வளைத்துப் போட பக்கா ஸ்கெட்ச் போடும் தினகரன் டீம்
பண்ருட்டி ராமச்சந்திரனை வளைப்பதில் தினகரன் தரப்பு மும்முரமாக இருக்கிறதாம்.
சென்னை: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை வளைத்துப் போடுவதில் தீவிரமாக இருக்கிறதாம் தினகரன் அணி.
எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய இளம் தளபதியாக வலம் வந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து ஐநாவில் பேச எம்.ஜிஆரால் அனுப்பி வைக்கப்பட்டவர் அவர்.
ஐநாவில் இருந்து பண்ருட்டியார் திரும்பியபோது எம்ஜிஆரே விமான நிலையம் சென்று அவரை வரவேற்று ஊர்வலமாக அழைத்து வந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் பாமகவில் இணைந்தார். தனிக்கட்சி தொடங்கினார்.

மீண்டும் அதிமுகவில்
பின்னர் விஜயகாந்த் தேமுதிக தொடங்கிய போது அக்கட்சியின் அவைத் தலைவரானார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.

சசி குடும்பத்தால் ஓரம்கட்டப்பட்டார்
ஜெயலலிதாவும் பண்ருட்டியாருக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா குடும்பத்தால் ஓரம்கட்டப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். தற்போது ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன.

கை கொடுப்பார் என நம்பிக்கை
இந்நிலையில் அவர்களுக்கு எதிராக வியூகம் வகுத்துச் செயல்பட பண்ருட்டியார் தேவை என தினகரன் தரப்பு கருதுகிறதாம். ஆகையால் அவரை வளைக்கும் நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளனவாம்.

தினகரனை சந்திக்கிரார் பண்ருட்டி
இதனடிப்படையில்தான் நேற்று முன்தினம் தினகரனை பண்ருட்டியார் சந்திக்கப் போகிறார் என தகவல் பரவியதாம். தற்போதைய சூழலில் தினகரனை பண்ருட்டியார் எந்த நிமிடத்திலும் சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications