ஜெ. உடல்நிலை குறித்து வலியுறுத்த கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வலியுறுத்த திமுக தலைவர் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் சாடியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று வலியுறுத்தியிருந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று வந்த பண்ருட்டி ராமச்சந்திரனிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

panruti-ramachandran-slams-karunanidhi

இதற்கு பதிலளித்த அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பவும், புகைப்படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தவும் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை என்றார்.

முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்பதை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.. லண்டனைச் சேர்ந்த மருத்துவர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றார் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+