விஜயகாந்த், அன்புமணி.. ஆளுக்கு ஒரு "பண்ருட்டி பலாப்பழம்"... ஜெ. பலே திட்டம்!
சென்னை: முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிடும் தேமுதிகவின் விஜயகாந்துக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரனையும், பாமகவின் அன்புமணி ராமதாசுக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகனையும் களமிறக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபைத் பொதுத்தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. அதிமுகவை பொறுத்தவரை, கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
200 தொகுதிகள் வரை அதிமுக போட்டியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர் பட்டியலும் ஏற்கெனவே தயாராகிவிட்டதாம். பெண்கள், படித்தவர்கள், இளைஞர்கள் என அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

முதல்வர் வேட்பாளர்கள்
திமுக, தேமுதிக, பாமக கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களுக்கு எதிராக செல்வாக்குமிக்க பிரபலங்களை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த் - பண்ருட்டி ராமச்சந்திரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிறுத்தப்பட உள்ளாராம். தேமுதிகவில் அவைத்தலைவராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

அன்புமணி - வேல்முருகன்
பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் நிறுத்தப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பண்ருட்டி பலாப்பழங்கள்
பாமகவில் இருந்த பண்ருட்டி வேல்முருகன், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தமிழக வாழ்வுரிமை கட்சியைத் தொடங்கினார். இப்போது பாமகவின் முதல்வர் வேட்பாளருக்கு எதிராகவே களமிறக்கப்பட உள்ளாராம். எப்படியோ விஜயகாந்த், அன்புமணிக்கு பண்ருட்டி பலாப்பழக்களை பார்சல் செய்ய முடிவெடுத்துவிட்டார் ஜெயலலிதா.
-
திருவள்ளுவருக்கு காவிச் சாயமா? தமிழர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் ஆளுநர் - வேல்முருகன் கண்டனம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications