இவரது இமையும் நடிக்கிறதே... பாபநாசம் குறித்து டிவிட்டரில் உருகும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகநாயகன் கமல் நடிப்பில் இன்று திரைக்கு வந்திருக்கும் பாபநாசம் திரைப்படம், ரசிகர்களின் பெருவாரியான ஆதரவுகளைப் பெற்று இருக்கிறது. உத்தம வில்லனில் இழந்ததை இதில் மீட்டு எடுத்திருக்கிறார் கமல்.

நீண்ட வருடங்கள் கழித்து கமல் குடும்பத் தலைவராக நடித்திருக்கும் படம், அதே போல நீண்ட வருடங்கள் கழித்து நடிகை கவுதமி நடித்து வெளிவந்திருக்கும் படம் என்று படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

வழக்கம் போல ரசிகர்களின் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் இந்த முறை காப்பற்றி இருக்கிறார் கமல், அதே போல படத்தைக் கொஞ்சமும் தரம் குறையாமல் எடுத்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று இருக்கிறார் படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப்.

பாபநாசம் படத்திற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அளித்திருக்கும் பாராட்டுகளை இங்கு காணலாம்.

உலகம் முழுவதும் வெற்றி

உலகநாயகன் கமல் ஹாசனின் பாபநாசம் உலகம் முழுவதும் வெற்றி என்று மகேஷ் என்பவர் கூறியிருக்கிறார்.

இமைகள் கூட நடிக்கும்

படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் நன்றாக இருந்தது, படத்தின் கடைசி காட்சியில் உலகநாயகனின் கண் இமைகள் கூட நடித்து இருந்தன. என்று பிரசாத் என்பவர் கமலின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

உண்மைக்கு நெருக்கமான கதை

பாபநாசம் நல்ல படம், உண்மைக்கு மிக அருகில் படம் எடுக்கப்பட்டுள்ளது, குடும்பப் படமாக வெளிவந்திருகிறது பாபநாசம் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று வீரா சொல்லியிருக்கிறார்.

சிந்தனையைத் தூண்டும் கதைக்களம்

கமல் கண்களாலேயே நடித்து இருக்கிறார், கவுதமியின் நடிப்பு சூப்பர். சிந்தனையைத் தூண்டும் ஒரு கதைக்களம் என்று படத்தை சிலாகித்து இருக்கிறார் சந்தோஷ்.

தேசியவிருது நிச்சயம்

கமல் சாரின் மணிமகுடத்தில் மற்றொரு ஆபரணமாக இந்தப் படம் சேர்ந்திருக்கிறது, கண்டிப்பாக தேசிய விருது நிச்சயம் என்று ஸ்டேட்டஸ் தட்டி இருக்கிறார் ராம்.

பாபநாசம் பார்க்க வேண்டிய இடம்- படம்

கமல் சாரின் மணிமகுடத்தில் மற்றொரு ஆபரணமாக இந்தப் படம் சேர்ந்திருக்கிறது, கண்டிப்பாக தேசிய விருது நிச்சயம் என்று ஸ்டேட்டஸ் தட்டி இருக்கிறார் ராம்.

பாபநாசம் பார்க்க வேண்டிய இடம்- படம்

கிளைமாக்ஸ் சூப்பர்

கிளைமாக்ஸ் சூப்பர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+