பரமக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை
பரமக்குடி: பரமக்குடி அருகே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற பாஜக நிர்வாகியை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்து தப்பிச் சென்றனர்.
சிவகங்கை மாவட்டம், கோலாந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர், காளையார்கோவில் ஒன்றிய பாஜக இளைஞரணித் தலைவராக இருந்தார். இவருக்கும், பரமக்குடி அருகே உள்ள புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செல்வி என்பவருக்கும் திருமணமாகி 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

உடுமலைப்பேட்டையில் வசித்து வந்த இவர், 6 மாதங்களுக்கு முன்பு பரமக்குடி மணிநகர் பகுதியில் தங்கி, கோழிக் கடை நடத்தி வந்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்காக மாலை அணிந்திருந்த ரமேஷ், திங்கள்கிழமை இரவு கோழிக் கடையை அடைத்துவிட்டு, புழுதிக்குளத்தில் உள்ள தனது மனைவி, குழந்தையைப் பார்க்க காரில் சென்றார்.
தென்பொதுவக்குடி காலனி அருகே கார் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் அவரது காரை வழிமறித்து, ரமேஷை விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிலைகுலைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி, பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரதேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த இடத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அரசியல் பிண்ணனியா ? அல்லது வேறு காரணமா ? என்ற கோணத்தில் பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!











Click it and Unblock the Notifications