வறுமையில் வாடும் பறவை முனியம்மா... முதியோர் உதவித் தொகைக்கு காத்திருப்பு
சென்னை: தூள் படத்தில் ஜோதிகாவின் பாட்டியாக நடித்து ‘மதுரை வீரன் தானே' என்ற ஒரே பாடலின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து இழுத்த நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா. சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சிகள் செய்து புகழ் பெற்றார். இன்றைக்கு வாய்ப்பு குறைந்து போனதால் வறுமையில் வாடுவதாகவும், முதியோர் உதவித் தொகை கேட்டு அரசை அணுகியிருப்பதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

சினிமா வாய்ப்பு
மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச் சேர்ந்த முனியம்மா அடிப்படையில் ஒரு நாட்டுப்புற பாடகி. ஊர் திருவிழாக்களில் முனியம்மாவின் பாட்டுக்கு கூட்டம் அள்ளும். சினிமாவில் பாடி ஆடி நடிக்கவே, ஒரு நடிகையாக, நாயகர்களுக்கு அம்மாவாக, பாட்டியாக கொண்டாடினார்கள்.

கிராமத்து பாடல்
இப்படி சிரிப்பு, பாட்டு, நடிப்பு என்று உற்சாகமாக இருந்த முனியம்மாவை வெளி நாட்டு தமிழர்களும் அழைத்து பாட வைத்து ரசித்தார்கள், கொண்டாடினார்கள்.

சின்னத்திரை சமையல்
ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் வாரம் தோறும் சமையல் குறிப்பு வழங்கி அசத்தினார். அம்மியில் பாடிக்கொண்டே அரைத்து ருசிக்க ருசிக்க சமையல் கற்றுத்தருவார் பரவை முனியம்மா.

வறுமையில் வாடும் முனியம்மா
தற்போது வாய்ப்பு குறைந்து வறுமை சூழ்ந்து, வயோதிகம் தந்த நோயோடு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இப்போது இருக்கிறார் முனியம்மா. ரேஷன் அரிசி சாப்பிட்டு ஜீவன் வாழ்வதாய் கூறும் முனியம்மா முதியோர் உதவித் தொகையை கேட்டு காத்திருக்கிறார்.

உதவித்தொகை கிடைக்குமா?
மருந்து வாங்குவதற்கு கூட அவரிடம் காசு இல்லை. அவருக்கு முதியோர் உதவி தொகைக் கூட தேவை இல்லை . கிராம கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகை கிடைத்தாலே அவர் கலைக்கு கிடைத்த அங்கிகாரமாக இருக்கும் என்கின்றனர் அவரது உறவினர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications