ஹய் சூப்பர்.. மகள்களைப் பெற்ற "மம்மி டாடி"களே .. நீங்களும் கூட இதை கடைப்பிடிக்கலாமே!
சென்னை: வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் ஒரு செய்தி இது. படித்ததும், அட நல்ல ஐடியாவா இருக்கே என்று தான் தோன்றியது.
இந்த ஐடியாவை தங்களது பிள்ளைகளுக்கும், குறிப்பாக பெண் குழந்தைகளை வைத்துள்ள அத்தனை அப்பா, அம்மாக்களும் கடைப்பிடிக்கலாம் என்றும் தோன்றியது.

வாட்ஸ் ஆப்பில் நாம் கண்ட அந்த செய்தி இதுதான்:
பெங்களூரில் 'little flower' என்கிற பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியிடம் முன்பின் தெரியாத ஒரு நபர், உன்னை அழைத்துவரச் சொல்லி உன்னுடைய அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார். வா போகலாம் என்று சொல்லி இருக்கிறார்.
உடனே அந்த சிறுமி, "password" சொல்லுங்கள் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி இருக்கிறாள்....
(அதாவது முன்பின் தெரியாத யாராவது உன்னை அழைத்தால் இந்த password கேட்டு தெரிந்துகொண்டு செல் என்று முன்னரே அவளுடைய தாயும், இந்த சிறுமியும் ஒரு password பகிர்ந்துகொண்டுள்ளார்கள்) ...
சிறுமி password கேட்கவும் அந்த கடத்தல் ஆசாமி எஸ்கேப் ஆகிவிட்டான்.
அருமையான யோசனை அல்லவா இது.... பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த முறையை உடனே அமல்படுத்துங்கள் பெற்றோர்களே....!












Click it and Unblock the Notifications