Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனி: 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பழனி: பழனி அருகே மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு, பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனுக்கு மாலைக்கண், மகள் மனநிலை பாதித்தவர், மற்றொரு மகள் மாற்றுத்திறனாளி என்பதால் மனமுடைந்து 3 பிள்ளைகளுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

பழனி அருகே உள்ள கீரனூர் மார்கண்டேயபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் முருகேசன் (வயது50). விவசாயி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (40). இவர்களது குழந்தைகள் தேன்மொழி (18), வசந்தி (16), வசந்தகுமார் (14).

Parents killed 3 childrens before suicide

முருகேசன் தோட்டத்து வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி விவசாய வேலை பார்த்து வந்தார். முதல் மகள் தேன்மொழிக்கு மாலைக்கண் நோய் மற்றும் உடல் ஊனமுற்றவர். இதேபோல் மற்ற 2 குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகள். இவர்களால் நடந்து செல்ல முடியாது. 3 குழந்தைகளும் உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்ததால் மற்ற குழந்தைகளை போல் வெளியே சென்று விளையாட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

இதனால் முருகேசனும் அவரது மனைவியும் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்தனர். தமக்கு பிறகு குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று வேதனை அடைந்துள்ளனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்தனர். நேற்று இரவு குழந்தைகள் 3 பேருக்கும் விஷம் கொடுத்தனர். பின்னர் தாங்களும் அதனை குடித்தனர். தோட்டத்து வீடு என்பதால் அக்கம் பக்கம் யாரும் கிடையாது. இன்று காலையில் தோட்டத்து வேலைக்கு வந்தவர்கள் வீடு திறக்கப்படாமல் இருந்ததை கண்டு எட்டி பார்த்தனர். அப்போது அவர்கள் அனைவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பழனி அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+