மீண்டும் திரளும் கருமேகக்கூட்டம்... பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் கலக்கம்!
சென்னை: கிட்டத்தட்ட ஒரு மாதகாலத்திற்குப் பின் மீண்டும் இன்று சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், காலை முதலே வானம் மேகமூட்டமாகக் காணப்படுவதால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் மழை வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
கனமழை, வெள்ளம் என பல்வேறு காரணங்களால் கடந்த 33 நாட்களாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வெள்ளம் காரணமாக பலர் சென்னையை விட்டு வெளியேறி சொந்த ஊர் சென்றிருந்தனர்.

மீண்டும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மக்கள் சென்னை திரும்பினர். வழக்கம்போல, இன்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த ஒருவாரமாக சென்னையில் வெயில் அடித்து வருவதால் இனி மழை வராது என்ற நம்பிக்கையில் அவர்கள் இருந்தனர். ஆனால், இன்று காலை முதலே சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாகக் காணப்படுகிறது.இதனால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
திடீரென கனமழை பிடித்து மீண்டும் வெள்ளம் வந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்கள் மத்தியில் உள்ளது. கடந்த முறை வந்த வெள்ளம் தந்த பாதிப்பிலிருந்தே இன்னும் மீளாத மக்கள், இன்று வானம் மேகமூட்டமாக இருப்பதாக மேலும் பீதியடைந்துள்ளனர்.
பள்ளிகளுக்குச் சென்று பிள்ளைகளை அழைத்து வந்து விடலாமா என்றும் அவர்கள் யோசித்து வருகின்றனர். ஒருவேளை மழை பெய்து, வெள்ளம் வந்தால், பெற்றோர் வீடுகளிலும், குழந்தைகள் பள்ளிகளிலும் சிக்கிக் கொள்ளுமே என்ற பதட்டம் அவர்களிடம் காணப்படுகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications