நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும்...யாராலும் தடுக்கமுடியாது"- தொண்டர்களுக்கு ஜெ. அட்வைஸ்
சென்னை: நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும் என்றும் இதை யாராலும்தடைசெய்ய முடியாது என்பதால் யாரும் கவலைப்படவேண்டாம் எனவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது....

உங்கள் அன்புச் சகோதரியாகிய எனது தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மீண்டும் மலர்வதில் ஏற்பட்டிருக்கும் கால இடைவெளி குறித்து நமது அரசியல் எதிரிகள் பரப்பிய வதந்திகளைக் கேட்டு, எழும்பூர் பகுதி 77-ஆவது தெற்குவட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி திரு. ராஜா என்பவர்மனம் வெதும்பி ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்
இந்த செய்தி கேட்டு நான் பெரிதும் வேதனைப்படுகிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையின் மீது மிகுந்த பாசமும், அன்பும் கொண்டகழகஉடன்பிறப்புகள் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நம்பிக்கையோடும், மன உறுதியோடும்செயல்பட வேண்டும் என்று நான் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நமது அரசியல் எதிரிகள் கழகத்தின் வளர்ச்சியினைக் கண்டும், வெற்றி மீதுவெற்றி வந்து நம்மைச் சேருவதைக் கண்டும் பொறாமை கொண்டவர்களாக பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
என்னை வீழ்த்த நினைத்தவர்கள் ஒரு போதும் வென்றதில்லை. பொய்ச் செய்திகளையும், பொருளற்ற வதந்திகளையும்பரப்பி, அதன் மூலமாவது அரசியல் மறு வாழ்வு பெற்றுவிட முடியுமா என்று முயற்சிக்கும் வீணர்கள் நமக்கு எதிராக தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.
இவற்றையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்று கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து சோதனைகளையும்கடந்து வெற்றி முகட்டில் நாம் நிற்கின்ற நேரம் இது.
மகிழ்ச்சியும், பெருமிதமும் பொங்க, ஆனந்தத்துடன் வெற்றி விழா கொண்டாடும் காலம் இது. சட்டத்தின் ஒழுங்குகளையும், வழிகாட்டும் நெறிகளையும்மதித்து அவற்றின்படி நம்முடைய அரசியல், ஆட்சி, நிர்வாகநடவடிக்கைகள் அமைய வேண்டும்.
அப்படித் தான் எப்பொழுதுமே நாம் செயல்பட்டு வந்திருக்கிறோம். எனவே தான், அடுத்தடுத்து நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஒரு திட்டமிட்ட கால அட்டவணையின்படி நடைபெற்று வருகின்றன.
இதில் எந்தக் குழப்பமும் இல்லை; எந்தச் சிக்கலும்இல்லை. நிதானமும், ஒழுங்கும் சட்டத்தின் வழிகாட்டுதல்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பின்பற்றப்படுவதைத் தவறாகப் புரிந்து கொண்டு, நிதானம் இழக்கும்அவசரச் செயல்களில் கழக உடன்பிறப்புகள் ஈடுபட்டு என்னை மன வேதனையில் ஆழ்த்த வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் நினைத்தது குறித்த நேரத்தில் நடக்கும். இதை யாராலும் தடை செய்ய முடியாது. ஆகவே, யாரும் கவலைப்படவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புச் சகோதரர் திரு. ராஜா அவர்களைஇழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரதுகுடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications