அதிமுகவில் இணைந்த ஆன்மீகப் "பசி" சத்யா !
சென்னை: பசி சத்யா அதிமுகவில் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகைகள் பட்டியலில் சத்யாவுக்கும் தனி இடம் உண்டு. நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு வலம் வந்தவர் சத்யா.
சென்னை பாஷையில் இவர் நடித்த படங்கள் எல்லாமே இவரது கேரக்டர் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் சத்யா. பசி படம்தான் இவரை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
1979ம் ஆண்டு வெளியான பசி படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அந்தப் படத்திற்குப் பிறகு பசி சத்யா என்று அழைக்ப்பட்டார். தொடர்ந்து வீடு, மறுபடியும், மறுபக்கம், டூயட் என 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலு மகேந்திராவின் படங்கள் இவருக்கு தனி மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தன.

பசி சத்யா
இன்றைய இளைய தலைமுறை நடிகர்களின் படங்களில் நடித்வதர் பசி சத்யா. விஜய்யுடன் சில படங்களில் நடித்துள்ளார். அதிலும் பிரண்ட்ஸ், திருமலை, ஷாஜகான் உள்ளிட்ட படங்களில் பசி சத்யா சின்ன ரோல்களில் வந்திருந்தாலும் பேசப்பட்டார். காரணம் அவரது நடிப்பு.

சித்தியில் சத்யா
நடிகை ராதிகாவின் சித்தி நாடகத்தில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. பசி சத்யா என்று அழைத்த அவரை அதன் பின்னர் சித்தி சத்யா என்று கூட அழைத்தனர். அந்த அளவுக்கு அவரது கேரக்டர் அப்போது பேசப்பட்டது.

சினிமா டூ சின்னத்திரை
இளவரசி, செல்லமே, கல்யாண பரிசு என்று மேலும் சில சீரியல்களில் நடித்துள்ளார் சத்யா. கனா காணும் காலங்கள் சீரியலிலும் அவரது நடிப்பு பேசப்பட்டது. பசி சத்யாவுக்கு கடந்த ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நடிப்பைக் குறைத்துக் கொண்டார்.

ஆன்மீக தரிசனம்
சத்யாவுக்கு நடிப்பு போக இன்னொரு பசி உண்டு. அது ஆன்மீகப் பசி.. ஆன்மீகம் குறித்தும், வழிபாடுகள், கோவில்கள் குறித்துக் கேட்டால் மணிக்கணக்கில் பேசுவார். அத்தனை தகவல்களை அவர் தன்னகத்தே வைத்துள்ளார். அதிமுகவில் பசி சத்யாவை ஜெயலலிதா எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications