சாத்தூர் பேருந்து துப்பாக்கிச் சூடு: பழிக்குப் பழியாக இளைஞர் கொலை #Murder
விருதுநகர்: சாத்தூர் அருகே அரசுப்பேருந்தில் இளைஞர் கருப்பசாமி முன்விரோதத்தில் முன் விரோதத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளார்.
இளைஞர் கருப்பசாமியின் சகோதரர்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். கொலை வழக்கில் பழிக்குப் பழியாக கருப்பசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு பேருந்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து சாத்தூரில் வந்த போது கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமியை இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தப்பி ஓடிய இருவரை, சாத்தூர் போலீசார் விரைந்து ஓடிச் சென்று பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும் போலீசார் அந்த இருவரை இன்னும் பிடிக்கவில்லை.
கருப்பசாமியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியானது. சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மாவட்ட எஸ்.பி ஆய்வு மேற்கொண்டார். தப்பியோடிய 2 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்புலன்ஸ் மூலம் கருப்புசாமியின் உடலை பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்டது முன்விரோதத்தில் நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இளைஞர் கருப்பசாமியின் சகோதரர்கள் மந்திரமூர்த்தி, கனகராஜ் ஆகியோர் கொலை வழக்கில் சிறையில் உள்ளனர். கொலை வழக்கில் பழிக்குப் பழியாக கருப்பசாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருப்பசாமி கோவையில் வேலை செய்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கருப்பாசாமிக்கு மனைவியும், 2வயது குழந்தையும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், பேருந்தில் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டது. பேருந்து நின்றது. உடனே இருவர் இறங்கி ஓடினர் என்று கூறினார். சாத்தூரில் அரசு பேருந்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications