லேட்டாக வரும் புறநகர் மின்சார ரயில்கள் – ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டம்!
சென்னை: செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான புறநகர் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதைக் கண்டித்து இன்று தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இந்தப் போராட்டம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு மணி நேர அளவுக்கு ரயில்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே செங்கல்பட்டு, சென்னை கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் ரயில்கள் இயங்க முடியாத அளவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

மின்சார விரைவு ரயில்கள்:
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மின்சார ரயில், விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் பயணிக்கும் மக்கள்:
வேலைக்கு செல்வோரும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்வோரும் விரைவு மின்சார ரயில்களில் பெரும்பாலும் பயணம் செய்து வருகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள்:
இன்று காலையும் வழக்கம் போல ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகள் காத்திருந்தனர். காலை 9.15 மணிக்கு வர வேண்டிய விரைவு ரயில் வரவில்லை. ஆனால் அது எப்போது வரும் என்ற அறிவிப்பும் இடம் பெறவில்லை.

சரிவர தகவல் இல்லை:
ஏமாற்றம் அடைந்த பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் சரிவர தகவல் தெரிவிக்கவில்லை.

கோபமடைந்த பயணிகள்:
இதனால் கோபமடைந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் அவ்வழியே சென்ற மின்சார ரயிலை புறப்பட விடாமல் தடுத்து போராட்டத்தில் குதித்தனர்.

பயணிகள் பெரும் அவதி:
இதனால் அதன் பின்னால் வந்த ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் போக்குவரத்து இரு மார்க்கத்திலும் பாதிக்கப்பட்டது. இதனால் ரயில்களில் பயணித்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

அதிகாரிகள் பேச்சு வார்த்தை:
இதையடுத்து போராட்டம் நடத்திய பயணிகளிடம் ரயில்வே அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதையடுத்து போராட்டம் விலக்கி்க் கொள்ளப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு:
இந்தப் போராட்டம் காரணமாக ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை, செங்கல்பட்டு மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து பெரும் பாதிப்பை அடைந்தது.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications