புதுக்கோட்டையில் ஷாக் : டீக்கடை சண்டை... மருத்துவமனைக்குள் நோயாளி கழுத்தை அறுத்து கொலை!
புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கே சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த மர்மநபர்கள் அங்கே சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்குக் காரணம் சாதாரண சண்டைதானாம்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியம் அருகேயுள்ளது மண்டக்காடு கிராமம். இக்கிராமத்தில் குடித்துவிட்டு அரசியல் பேசிக்கொண்டிருந்த ராமலிங்கம்,42, சொக்கலிங்கம்,68 ஆகிய இருவரும் தகராறு ஏற்பட்டது. இதில் இருவருமே காயமடைந்தனர்.

சொக்கலிங்கம் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் ராமலிங்கம் புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்கள். ராமலிங்கம் இன்று அதிகாலையில் மருத்துவமனைக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ராமலிங்கம் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மண்டக்காடு கிராம மக்கள் புதுக்கோட்டை ஸ்ரீமீனாட்சி மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமலிங்கத்தின் அம்மா அழுது கொண்டே செய்தியாளர்களிடம் பேசினார். என் மகனின் மாமனார், ஸ்ரீமீனாட்சி மருத்துவனையில் கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை கொடுத்தார். நான் கீழே தூங்கிக் கொண்டிருந்தேன். காலையில் எழுந்து போய் பார்த்த போது என் மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து எனக்கு மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டேன் என்றார்.
ராமலிங்கம் மரணம் பற்றி உறவினர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். ராமலிங்கம் இறந்த தகவல் டாக்டருக்கு நர்ஸ்கள் மூலம் தெரியப்படுத்தியிருக்காங்க. உடனே டாக்டர் கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த ராமலிங்கத்துக்கு தையல் போட்டு வேகமாக தூக்கிட்டு போங்கன்னு ராமலிங்கம் அம்மாவை மிரட்டியிருக்கிறார்.
வெட்டு பட்ட ராமலிங்கம், வலியோடு பேசினார், ரெண்டு பேர் வந்தாங்க. ஒருத்தன் குட்டையாக இருந்தான். இன்னொருத்தன் உயரமாக இருந்தான்னு மட்டும் சொன்னவன் இருமிருக்கான் ரத்தம் வாய் வழியாக வந்ததும் இறந்துட்டான். இப்ப நாங்க மருத்துவமனையில் உள்ள கேமராக்களை செக் பண்ண சொல்லியிருக்கிறோம். அத பார்த்தப் பிறகு தான் மற்ற முடிவு எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
சொத்துப் பிரச்னையோ, கொடுக்கல் வாங்கல் பிரச்னையோ கிடையாது. பத்து பைசாவுக்குகூட பிரயோசனம் இல்லாத சண்டை இன்னைக்கு உயிரை எடுத்துவிட்டது.
ராமலிங்கத்துடன் சண்டை போட்ட சொக்கலிங்கம் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications