இலங்கை... லோக்சபா தேர்தலைப் பாதிக்குமோ...கலக்கத்தில் காங்.. ப.சி. போடும் கூட்டம்!
சென்னை: இலங்கை விவகாரம் லோக்சபா தேர்தலின்போது தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று காங்கிரஸ் சந்தேகப்படுகிறதாம். இதனால் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைக் களத்தில் இறக்கி விட்டுள்ளது காங்கிரஸ்.
இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த முறை அது கூடுதலாகியுள்ளது. குறிப்பாக காமன்வெல்த் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் போட்ட இரட்டை வேடத்தை தமிழ் மக்களே ரசிக்கவில்லை.

பிரதமர் போகவில்லை..
இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் போகக் கூடாது என்று முதலில் கோரிக்கைகள் இருந்தன. இதை ஏற்று பிரதமரும் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டு போகவில்லை.

ஆனால் குர்ஷித் போய் விட்டாரே
ஆனால் இலங்கையை சமாளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நைஸாக அங்கு அனுப்பி வைத்தது காங்கிரஸ்.

குர்ஷித் பேசிய பேச்சுக்களால் கொந்தளிப்பு
குர்ஷித்தோ, அடுத்தடுத்து தான் இலங்கை போவதன் நியாயத்தை வலியுறுத்தி ஆணி்த்தரமாகவும், தமிழகத்தின் எதிர்ப்புகள் தவறு என்பது போலவும் பேசப் போக அது மேலும் கொதிப்பையே அதிகரித்தது.

சட்டசபைத் தீர்மானம் குப்பையில்
அதை விட முக்கியமாக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு இந்தியாவிலிருந்து யாரும் போகக் கூடாது என்று ஒரு மனதாக தீர்மானம் போடப்பட்டது. அதையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.

காங்கிரஸ் புறக்கணிப்பால் மேலும் கொதிப்பு
மேலும் இந்த தீர்மானத்தின் வி்வாதத்தையும், வாக்கெடுப்பையும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புறக்கணித்த செயல் மேலும் எரிச்சலையே ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வருகிறதே
இந்த நிலையில், லோக்சபா தேர்தல் வரவுள்ளதால், இலங்கை விவகாரம் தமிழகத்தில் தனது காலை வாரி விடலாம் என காங்கிரஸ் இப்போது பயப்படுகிறதாம்.

விளக்கக் கூட்டம்
இதையடுத்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கை விவகாரம் குறித்து விளக்குவதற்காக அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், கட்சி சார்பற்ற பிரமுகர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறாராம். சென்னையில் இந்த மாதம் 30-ம் தேதி இந்தக் கூட்டம் நடக்க இருக்கிறது.

விலாவாரியாக விளக்கப் போகிறார்
இலங்கை விவகாரம், இந்தியாவின் உதவிகள், போர், காமன்வெல்த், சீனாவின் அச்சுறுத்தல் என காங்கிரஸ் கண்கொண்டு விளக்குவாராம்.

எடுபடுமா
ஆனால் தேர்தலை மனதில் கொண்டு காங்கிரஸ் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் தமிழக மக்கள் மத்தியில் எடுபடுமா என்பதை தேர்தல் முடிவுகளின்போதுதான் தெரிந்து கொள்ள முடியும்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications