ஜெயலலிதாவுக்கு மறக்க முடியாத தோல்வியைத் தந்த.. பென்னாகரம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் மறக்க முடியாத படுதோல்வியைத் தந்தது பென்னாகரம்தான். அந்தத் தொகுதியில்தான் தற்போது பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.
அவருக்கு எதிராக கே.பி.முனுசாமியை அதிமுக நிறுத்தியிருந்தாலும் கூட அன்புமணிக்கு சாதகமானதாக பல விஷயங்களை அடுக்கலாம்.
2010.. இந்த ஆண்டை பென்னாகரம் மக்களும் சரி, பாமகவினரும் சரி, அதிமுகவினரும் சரி மறக்கவே முடியாது. பாமகவுக்கு உற்சாகத்தைக் கொடுத்த இடைத்தேர்தல் நடந்த ஆண்டு இது. அதேபோல அதிமுக படு தோல்வி அடைந்து டெபாசிட்டைப் பறி கொடுத்த இடைத்தேர்தலை கண்ட ஆண்டு இது.

பென்னாகரம் இடைத் தேர்தல்
பென்னாகரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பெரியண்ணன் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்ததைத் தொடர்ந்து 2010 மார்ச்சில் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பெரியண்ணனின் மகன் இன்பசேகரன் போட்டியிட்டார்.

திமுக வெற்றி
இத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன், 36,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்குக் கிடைத்த வாக்குகள் 77,669. திமுக தொகுதியை தக்க வைத்துக் கொண்டது. அப்போது ஆட்சியில் இருந்தது திமுக.

பாமகவுக்கு 2வது இடம்
இத்தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. திமுகவுக்கு அச்சம் தரும் வகையில் அதி தீவிரமாக தேர்தல் பணியாற்றியது. இதன் விளைவாக அது 2வது இடத்தைப் பிடித்து அசரடித்தது.

ஜி.கே.மணி மகன் தமிழக்குமரன்
பாமக வேட்பாளராகப் போட்டியிட்ட கட்சித் தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் 41,285 வாக்குகளைப் பெற்று 2வது இடத்தைப் பிடித்தார்.

அதிமுக டெபாசிட் காலி
இவர்களைத் தவிர மற்ற 29 வேட்பாளர்களுக்கும் டெபாசிட் பறிபோனது. அவர்களில் அதிமுக வேட்பாளர் ஆர். அன்பழகனும் அடக்கம். அவருக்கு 26,787 வாக்குகளே கிடைததது.

தேமுதிகவுக்கு 11,406
இத்தேர்தலில் தேமுதிகவும் வழக்கம் போல தனித்துப் போட்டியிட்டது. அக்கட்சிக்கு 11,406 வாக்குகள் கிடைத்தன. வழக்கம் போல டெபாசிட் பறிபோனது.

11வது இடைத் தேர்தல்
பென்னாகரம் இடைத் தேர்தலானது, 2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற 11வது இடைத் தேர்தலாகும். அந்த திமுக ஆட்சியில் நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மட்டுமே வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications