ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு.. இன்று தொடங்கும் டோக்கன் விநியோகம்! எங்கு சென்று வாங்க வேண்டும்
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கன் வினியோகம் இன்று முதல் ரேஷன் கடைகளில் தொடங்க உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு பரிசு தொகுப்பு வழங்கப்படும்., பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

கடந்தாண்டு இந்த பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. அதன்படி இந்தாண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
பொங்கல் பரிசு: 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்ய அரசாணையும் வெளியிடப்பட்டது. இதற்காகத் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 238.92 செலவினம் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு மட்டுமன்றி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. முதலில் இந்த பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு மட்டும் வெளியான நிலையில், ரொக்கம் குறித்து எந்தவொரு அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து பலரும் பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
யாருக்கு கிடைக்காது: இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். வருமான வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோருக்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகை கிடைக்காது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள்: இந்த பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படும் ரூ.1000 பெற இன்று முதல் டோக்கன் விநியோகம் ஆரம்பிக்கிறது. பொதுமக்கள் ரேஷன் கடைகளில் சென்று இந்த டோக்கனை பெற்றுக்க கொள்ளலாம். அந்த டோக்கனில் ஒருவர் எந்த நாளில் எத்தனை நேரத்தில் வந்தால் பொங்கல் பரிசு தொகுப்பைப் பெறலாம் என்பது விளக்கப்பட்டு இருக்கும். அதன்படி கூட்ட நெரிசல் இல்லாமல் பொதுமக்கள் பரிசு தொகுப்பைப் பெறலாம்.
அதேபோல இந்த பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படும். அதேநேரம் NPHH கார்டோ அல்லது PHH கார்டோ, PHH - AAY கார்ட் வைத்திருப்போருக்குப் பொங்கல் பரிசுத் தொகை கிடைக்காது.












Click it and Unblock the Notifications