உங்க ஊரில் இப்போ எங்கே வெள்ள பாதிப்பு? உடனே கண்டுபிடிக்க உதவும் விக்கிபீடியா மேப்
தமிழ்நாட்டில் வெள்ளம் வந்து இருக்கும் பகுதிகளை விக்கிபீடியாவில் 'ஓபன் ஸ்டிரீட் மேப்' என்ற இணையதள பக்கம் மூலம் மிகவும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று காலையில் இருந்து கடுமையான மழை பெய்தது. இதனால் பொது மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
இந்த கடுமையான மழை காரணமாக சென்னையில் சில பகுதியிலும் மற்ற மாவட்டங்களில் சில இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் தாம்பரம், வியாசர்பாடி போன்ற புறநகர் பகுதிகளில் வீட்டுக்குள் வெள்ளம் சென்று இருக்கிறது.
இந்த நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க வழி ஒன்று உருவாகி இருக்கிறது. அதன்படி தமிழ்நாட்டில் வெள்ளம் வந்து இருக்கும் பகுதிகளை விக்கிபீடியாவில் 'ஓபன் ஸ்டிரீட் மேப்' என்ற இணையதள பக்கம் மூலம் மிகவும் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

சென்னையில் வெள்ளம்
சென்னையில் நேற்று காலையில் இருந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. மேலும் இந்த கடுமையான மழை காரணமாக சென்னையில் சில பகுதியிலும் மற்ற மாவட்டங்களில் சில இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையில் தாம்பரம், வியாசர்பாடி போன்ற புறநகர் பகுதிகளில் வீட்டுக்குள் வெள்ளம் சென்று இருக்கிறது. மேலும் நிறைய பேருந்து நிலையங்களிலும், சப் வேகளிலும் அதிக அளவில் மழை நீர் புகுந்து இருக்கிறது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றது.

எளிதாக கண்டுபிடிக்கலாம்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் எங்கு எல்லாம் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை கண்டிபிடிக்க புதிதாக ஒரு வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி விக்கிப்பீடியாவிற்கு சொந்தமான 'ஓபன் ஸ்டிரீட் மேப்' என்ற இணையதளத்தில் சென்னையில் எங்கு எல்லாம் வெள்ளம் இதுவரை சூழ்ந்து இருக்கிறது என்பதை பார்க்க முடியும். இதில் வெள்ளம் சூழந்த இடங்கள் பிங்க் நிறத்தில் இருக்கும். மேலும் எங்கு எல்லாம் மீட்பு முகாம்கள் இருக்கின்றதோ அங்கு எல்லாம் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் குறிக்கப்பட்டிருக்கும்.

செயல்பாடு எப்படி
இதன்முலம் சென்னையில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் கூட எளிதாக வெள்ளம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை பார்க்க முடியும். இது ஒரு சேவை நோக்கில் உருவாக்கப்பட்ட இணையதளம் ஆகும். இதில் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். மேலும் மீட்பு முகாம்கள் திறந்திருக்கும், மூடப்பட்டிருக்கும் இடங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நாம் கூட பங்கு பெறலாம்
இது லாபம் சாராத அமைப்பு என்பதால் இதில் யார் வேண்டுமானாலும் தகவல்களை மாற்றலாம். அதன்படி உங்களுக்கு தெரிந்து ஒரு பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது என்றால் நீங்கள் அதில் சென்று தகவல் தெரிவிக்கலாம். இல்லை என்றால் நீங்களே அதில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் பகுதிகளை குறிக்கலாம். இதன்முலம் இந்த தகவல்கள் அடிக்கடி அப்டேட் செய்யப்படுகின்றன.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications