Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெல்கம் 2015... தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஜோர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இன்பமும், துன்பமும் ஒருங்கே கலந்த பல்வேறு நினைவுகளைப் பரிசாகக் கொடுத்து விட்டு 2014ம் ஆண்டு விடை பெற்றுக் கொண்டது. புத்துணர்வு தரும் வெற்றி ஆண்டாக புதிய ஆண்டை மக்கள் கொண்டாட்டத்துடன் தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

People celebrates the birth of new year 2015

மெரினாவில் கூடிய மக்கள்...

சென்னையில் மெரினா கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாகக் கூடி புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

ஹோட்டல்களிலும்...

இது தவிர பல ஹோட்டல்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரவு 9 மணிக்கு தொடங்கிய நடனம் விடிய, விடிய நடந்தது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் அவர்கள் கேக் வெட்டி, ஹேப்பி நியூ இயர் என்று கோரசாக குரல் எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கேக் வெட்டிக் கொண்டாட்டம்...

பனி, மழை காரணமாக வீடுகளை விட்டு வெளியே கொண்டாட்டங்களுக்குச் செல்ல முடியாத மக்களும் வீட்டிலேயே கேக் வாங்கி, அதை வெட்டி புத்தாண்டை இனிப்பாக வரவேற்றனர்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்...

புத்தாண்டு பிறந்த தருணத்தில் சாலையில் செல்வோர் எதிர்ப்படும் அனைவரிடமும் பாகுபாடின்ரி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிஜமாக்கும் இனிய வெற்றிகரமான ஆண்டாக இந்த ஆண்டு அமைய அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நெல்லை மக்களின் ஆங்கிலப் புத்தாண்டு ஆனந்தக் கொண்டாட்டம்:

நெல்லையிலும் ஆங்கில புத்தாண்டு அனைத்துதரப்பு மக்களாலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு என்பதாலும் அதிகாலை முதலே இந்துக்கள் தங்களது வாசல்களை வண்ணமயமான கோலங்களால் அலங்கரித்திருந்தனர். நள்ளிரவு முதலே பிரார்த்தனைக்காக ஆலயங்களுக்கு செல்லத் தொடங்கினர்.

People celebrates the birth of new year 2015

இதனால் நெல்லை நெல்லையப்பர் ஆலயம்,குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம்,தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலயம், திருவிலஞ்சி குமரன் ஆலயம்,திருமலைக் கோவில் ,திருச்செந்தூர் முருகன் ஆலயம்,திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் உள்ளிட்ட தென்மாவட்ட ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, குமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் இன்று பெருமளவில் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். திருவட்டார் பஸ்ஸ்டாண்டில் இருந்து கோயில் வரை சுமார் அரை கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பகவானை வழிபட்டனர்.

கடந்த 30ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு திருவட்டாறு ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பெரும்கூட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

பஸ் ஸ்டிரைக் காரணமாக புத்தாண்டு அன்று வீட்டில் தான் முடங்கிக் கிடக்கப் போகிறோம் என்ற கவலையில் இருந்தனர் மக்கள். ஆனால், போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து உற்சாகமாக மக்கள் கோயில் உள்ளிட்ட வெளி இடங்களுக்குச் சென்று வந்தனர். இதனால் பேருந்துகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+