வெயிலையும் பொருட்படுத்தாமல் 'அம்மா'வை காணும் ஆசையில் சேலத்தில் குவிந்த மக்கள்
சேலம்: சேலம் மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் இருந்த ஏசி பெட்டிகள் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. என்ன தான் வெயில் அடித்தாலும் ஜெயலலிதாவை பார்க்கும் ஆசையில் மக்கள் கூட்டத்திற்கு வருகிறார்கள்.
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பகல் வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறார். அவரது கூட்டங்களுக்கு வரும் மக்களுக்கு தொப்பிகள் அளிக்கப்பட்டாலும் அவர்கள் வெயிலை தாங்க முடியாமல் திணறுகிறார்கள்.
இந்நிலையில் ஜெயலலிதா சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடியில் புதன்கிழமை பிரச்சாரம் செய்தார்.

வேட்பாளர்கள்
ஜெயலலிதா சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் போட்டியிடும் 46 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கேரள மாநில சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். வேட்பாளர்கள் மேடைக்கு அருகே நிழலான இடத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டனர்.

பச்சை தொப்பி
கூட்டத்திற்கு வந்திருந்த மக்களுக்கு பச்சை தொப்பி அளிக்கப்பட்டது. தொப்பியை அணிந்தபோதிலும் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அல்லாடினர். இந்நிலையில் 2 பேர் வெயிலை தாங்க முடியாமல் பலியாகினர்.

அமோக ஆதரவு
என்ன தான் வெயில் ருத்ரதாண்டவம் ஆடினாலும் ஜெயலலிதாவை பார்க்கும் ஆசையில் கூட்டம் நடக்கும் இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் ஜெயலலிதாவை பார்த்ததும் வெயிலை மறந்து உற்சாக கரகோஷம் எழுப்பினர்.

ஏ.சி.
மக்கள் எல்லாம் வெயிலில் வாட ஜெயலலிதா மட்டும் பல ஏ.சி. பெட்டிகளில் இருந்து குளு குளு என காற்று வரும் இடத்தில் அமர்ந்து பேசினார். அவர் மட்டும் ஏசியில் அமர்ந்து உரையாற்றுவதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications