பஸ் கட்டண உயர்வால் அவதி.. ரயில் சேவையை நாடி வரும் மக்கள்
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் ரயில்களில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிகஅளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் குறைந்த கட்டணமான ரயில்களை நாடியுள்ளனர்.
எரிப்பொருள் விலையேற்றம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு, பழுது மற்றும் பராமரிப்பு கட்டண உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி பஸ் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தப்பட்டது. இதை பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் எதிர்த்து வருகின்றனர்.
கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கட்டணம் எவ்வளவு
சென்னை சென்ட்ரலில் இருந்து தாம்பரத்துக்கு செல்வதற்கு மின்சார ரயிலில் வெறும் 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதே மாநகரப் பேருந்துகளை எடுத்துக் கொண்டால் சாதாரண பேருந்துகளில் ரூ.21 ஆகவும், டீலக்ஸ் பேருந்துகளில் ரூ.40 ஆகவும் வசூலிக்கப்படுகிறது. இது ரயில் கட்டணத்தை காட்டிலும் 4 மடங்கு அதிகம் ஆகும்.

கூட்டம் அலைமோதல்
கடந்த சனிக்கிழமை இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். ஆனால் இன்று திங்கள்கிழமை பேருந்து கட்டணம் எகிறியதால் மக்கள் காலை 8 மணிக்கெல்லாம் சென்னை சென்ட்ரல் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களை மொய்ததனர். இன்னும் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்திருக்கும்.

அதிகம் பேர் வருகை
மின்சார ரயில்களில் கூட்டம் என்பது ஏற்கெனவே அதிகளவில் இருந்து கொண்டிருக்கிறது. மேலும் சென்னைக்கு வந்து குடியேறுபவர்களும் ரயில் நிலையத்தின் பக்கத்தில் குடியேறுகின்றனர். ரயில் பயணம் அலுப்பில்லாத பயணம் என்பதாலும் , குறைந்த கட்டணம் என்பதாலும் இதை விரும்புகின்றனர். தற்போது பேருந்து கட்டண உயர்வால் ரயில்நிலையங்களில் பெருந்திரளாக திரண்ட கூட்டத்தால் வழக்கமாக ரயில்களில் செல்வோரும் சற்று சிரமத்துக்குள்ளாகினர்.

பயணிகள் உயர்வு
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இருந்து பல்வேறு இடங்களுக்கும், அலுவலகங்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகம். சுமார் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேர் இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். ஆனால் இந்த பேருந்து கட்டணம் உயர்வால், இது பல மடங்காக உயரக்கூடிய வாய்ப்பிருக்கும் சூழல் அதிகரித்திருக்கிறது. இந்த மக்கள் கூட்டம் காரணமாக கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டிய கட்டாயம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications