வெள்ளநிவாரணம்: சென்னை முகப்பேரில் சாலை மறியல்- அமைச்சர் ரமணாவின் கார் முற்றுகை
சென்னை: வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணியில் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி முகப்பேர் பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கணக்கான மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற அமைச்சர் ரமணாவின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பல பகுதிகள் மூழ்கின. இதனையடுத்து நிவாரண பணிகளில் மாநகராட்சியினரும், வருவாய் அலுவலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு வீடு இழந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதற்கான கணக்கெடுப்பு பணியில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர்களும், ஊழியர்களும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இதில் பல பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக திமுகவினர் கவுன்சிலர்களாக உள்ள பகுதிகளில் சுகாதாரப்பணிகளோ, கணக்கெடுப்பு பணிகளோ நடைபெறுவதில்லை என்பது குற்றச்சாட்டாகும். இந்த நிலையில் முகப்பேர் பகுதிகளில் கழிவு நீரை அகற்றக்கோரி கடந்த வாரம் போராட்டம் நடத்திய மக்கள் இன்று வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணிகளில் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் ரமணாவின் காரை முற்றுகையிட்டு சிறை பிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் அமைச்சரின் காரை மீட்டு அனுப்பிவைத்தனர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ள நிவாரணம் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications