மணப்பாறை அருகே சாலை மறியல்... போலீஸ் தடியடி.. பதற்றம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: மணப்பாறை அருகே துவலங்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
கோயில் நில பிரச்சினை தொடர்பாக இருபிரிவினர் நேற்று மோதி கொண்டனர். மோதல் தொடர்பாக ஊர் நட்டாமையை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். போலீசார் நடத்திய தடியடியில் நல்லபிச்சை என்பவர் காயமடைந்துள்ளார்.
போலீஸ் தடியடி - வீடியோ












Click it and Unblock the Notifications