''கறந்த பால் மடி புகாது'': பாஜக கூட்டணி அழைப்புக்கு வைகோ பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியில் சேருமாறு மதிமுகவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு குறித்த கேள்விக்கு கறந்த பால் மடிபுகாது என்று வைகோ பதில் அளித்துள்ளார். மக்கள் நலக்கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்றும் வைகோ தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் மாநில மாணவரணி நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் நிச்சயம் எங்கள் கூட்டணிக்கு வருவார் என்று கூறினார்.

People's Welfare Front will Win 2016 Assembly Polls : Vaiko

தமிழக சட்டசபை தேர்தல் பணிகள் குறித்தும், மக்கள் நல கூட்டணி வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்து பரிமாற்றம் நடத்துவதற்காக மாணவரணி ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். இதில் பிரமிக்கதக்க வகையில் மக்கள் நல கூட்டணிக்கு பேரதரவு கிடைத்துள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், சமூக வலைதளங்கள், முகநூல், குறுஞ்செய்தி மூலமும் ஆதரவு கிடைத்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் இடையே பெரும் ஆதரவு மக்கள் நல கூட்டணிக்கு கிடைத்து உள்ளது. மக்கள் நலக்கூட்டணி வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். ஊழல், மது, இல்லாத தமிழகத்தை உருவாக்க மக்கள் நலக்கூட்டணி பாடுபட்டு வருகிறது என்றும் வைகோ தெரிவித்தார்.

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெறுள்ளது. தனி மனித சுதந்திரத்துக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்துத்துவ கொள்கைகளை புகுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் ஒருமைபாடு சுக்குநூறாக நொறுங்கி போய் விடுமோ என்ற நிலை தற்போது நிலவுகிறது. சமஸ்கிருத மொழி திணிப்பு கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் திரும்புமாறு தமிழிசை விடுத்த அழைப்பு குறித்த கேள்விக்கு, 'கறந்த பால் மடிபுகாது' என்று வைகோ பதில் அளித்தார்.

பாமகவை யாரும் கூட்டணிக்கு அழைக்காத காரணத்தாலேயே, அந்த கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் வைகோ கருத்து தெரிவித்தார்.

காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக, பா.ம.க. ஆகிய 5 கட்சிகளோடு எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டணி வைத்துக்கொள்ளாது என மக்கள் நலக்கூட்டணி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+