For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்காக போராடியது பித்தலாட்டமா? எச்.ராஜா 'பகீர்' கேள்வி: வீடியோ

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்கள், மத்திய அரசின் பசுவதை தடுப்பு சட்ட திருத்தத்துக்கு ஆதரவாகவும் போராட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடியது பித்தலாட்டம் என்று பாஜக

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்கள், பசு வதை தடுப்பு சட்டத்துக்கு ஆதரவாகவும் போராட வேண்டும். பசுக்களை பாதுகாக்கத்தான் இந்த பசு வதை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

பசுவதை சட்ட திருத்தத்தில் இறைச்சிக்காக பசுக்களை வாங்கவோ, விற்கவோ கூடாது என கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கேரளா, புதுவை உள்ளிட்ட மாநில அரசுகளும் சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

 People should support the central government which bring law foe saving cow told H.Raja

சென்னை ஐஐடியில், இந்த சட்ட திருத்ததை எதிர்த்து மாட்டுக்கறி சாப்பிட்ட சூரஜ் என்ற ஆய்வு மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் ஆங்காங்கே மத்திய அரசின் இந்த தடைக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறும்போது, ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராடியவர்கள் இந்த சட்ட திருத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். நாட்டு காளை வேண்டுமென்றால் நாட்டுப் பசு பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடுகிறவர்கள் அனைவரும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடியது பொய், பித்தலாட்டம் என்பது உறுதியாகிறது என கூறினார். இன்று தமிழகம் முழுவதும் திமுக இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போரடடம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
People who protested for jallikattu should support cow's meat law also told H.Raja, Bjp leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X