மக்கள் வாக்களித்தது ஜெயலலிதாவுக்கா?.. இல்லை இரட்டை இலைக்கா? என்று இப்போ தெரியுதா?
கடந்த சட்டசபை தேர்தலின்போது மக்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களித்தார்களா இல்லை இரட்டை இலைக்கு வாக்களித்தார்களா என்பது இப்போது தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சின்னம் இருந்தாலும் ஜெயலலிதாவுக்காகத்தான் வாக்களித்தார்கள் என்பது இப்போது புரிந்திருக்கும்.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. அப்போது சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என செயல்பட்டது.
சசிகலா தலைமையை பிடிக்காத வாக்காளர்கள் அவரவர் தொகுதி எம்எல்ஏக்களுக்கு போன் செய்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இரட்டை இலைக்குத்தான்
ஜெயலலிதா இருந்தவரை மூச்சு விடவே பயந்தவர்கள் அவர் இறந்த பின்பு என்னவெல்லாம் பேசினார்கள் தெரியுமா. வாக்காளர்கள் சசிகலா அணி எம்எல்ஏக்களுக்கு போன் செய்த போது நீங்கள் ஓட்டு போட்டது ஜெயலலிதாவுக்கு இல்லைங்க. இரட்டை இலை சின்னத்துக்குதான்.. என்று நாகூசாமல் பொய் கூறினர்.

வாக்காளர்களை கடிந்தனர்
இன்னும் சில எம்எல்ஏக்களோ இது எங்கள் கட்சி பிரச்சினை, யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தற்போது உங்களிடம் கூற முடியாது என்றும் போன் நம்பரை வைத்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்றும் மிரட்டினர். பெண் எம்எல்ஏக்களும் இதுபோல்தான் நடந்து கொண்டனர்.

இரட்டை இலை இருக்கே
ஜெயலலிதா இல்லாவிட்டால் என்ன இரட்டை இலையை பெற்று இடைத் தேர்தலை சந்தித்தே தீர வேண்டும் என்று மிகவும் போராடி இரட்டை இலை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் பெற்றனர். இதற்காக ஆர்கே நகர் இடைத்தேர்தல் இழுத்தடிக்கப்பட்டது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

தினகரன் வெற்றி பெறுவார்
ஆர்கே நகருக்கு கடந்த 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். இதிலிருந்து மக்கள் ஜெயலலிதாவுக்குத்தான் வாக்களித்தார்கள், நமக்கோ இரட்டை இலைக்கோ வாக்களிக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருப்பர். இரட்டை இலை என்பது ஒரு சின்னம் அவ்வளவே அதை வைத்து கொண்டு எதையும் செய்ய முடியாது என்பதையும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்றே நம்புவோம்.












Click it and Unblock the Notifications