கமலையும் அவரின் கோட்பாடுகளையும் மக்கள் ஏற்க மாட்டார்கள்.. சொல்வது தமிழிசை

நடித்து கஜானாவை நிரப்பி விட்டு கஜானா நோக்கிய பயணமில்லை என்று கமல் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கமலை ஏற்க மாட்டார்கள்-தமிழிசை- வீடியோ

    சென்னை: கமலையும், அவரின் கோட்பாடுகளையும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

     People wont believe the Political theories of kamalhassan says Tamilisai

    கமல் நேற்று தனது நற்பணி மன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அவர்கள் மத்தியில் பேசிய கமல், தன்னுடைய பயணம் அரசின் கஜானாவை நோக்கி அல்ல மக்களை நோக்கி என்றார். மேலும் பிற அரசியல் கட்சியிலிருந்து வேறுபட்டு நம்முடைய பயணமிருக்கும் என்றும் அவர் கூறினார். கமலின் இந்த கருத்திற்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிப்பின் மூலம் கஜானாவை நிரப்பிய கமல் தற்போது கஜானா குறிக்கோள் அல்ல என பேசுவது வேடிக்கையாக இருக்கு என்றார். மேலும் இதனை யாரும் நம்பமாட்டார்கள் என்றும், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு ஒரே மாற்று சக்தி பாஜக மட்டும் தான் என்றும் கூறினார்.

    ஊழல் நிறைந்த போக்குவரத்து துறையை லாபகரமானதாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தமிழிசை, கமலஹாசனையும், அவரின் அரசியல் கோட்பாடுகளையும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+