7 பேர் விடுதலை.. ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தார் அற்புதம்மாள்
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பேசினார் அற்புதம்மாள்.
சென்னை: தமிழக ஆளுநரை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்று நேரில் சந்தித்தார். அப்போது 7 பேரை விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஏற்குமாறு ஆளுநரிடம் அற்புதம்மாள் வலியுறுத்தினார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு முடிவு எடுக்கலாம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரதவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் விடுதலை குறித்து தீர்மானமும் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கும் அனுப்பி வைத்தது.

வலுக்கும் கோரிக்கைகள்
ஆனால் அந்த பரிந்துரை தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த வித முடிவையும் எடுக்கவில்லை, அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் 7 பேர் விடுதலை தாமதமாகி கொண்டே வருகிறது. இந்த தாமதம் வேண்டாம் என்றும் விரைந்து ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

ஆளுநரிடம் மனு
இது தொடர்பாக இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். அப்போது 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையில் கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.

அற்புதம்மாள் பேட்டி
ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அற்புதம்மாள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் மனு ஒன்றை அளித்தேன். அந்த மனுவில் நீதிபதி கே.டி. தாமஸின் தீர்ப்பு விவரத்தையும் இணைத்திருக்கிறேன்.தமது மகன் தரப்பு நியாயத்தை மனுவில் எழுதியிருப்பது குறித்தும் விளக்கினேன்.

நம்பிக்கை உள்ளது
அதனை ஆளுநர் கனிவுடன் கேட்டார். மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். எனவே அமைச்சரவை பரிந்துரையை உடனடியாக பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது". இவ்வாளு அற்புதம்மாள் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications