பேரறிவாளனுக்கு இருதய பரிசோதனை

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று இருதய பரிசோதனை நடத்தப்பட்டது.

Perarivalan Undergoes Cardio Test

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் அவருக்கான மருத்துவப் பரிசோதனைகள் சிறையில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்படும்.

இதற்கிடையில், தனக்கு இருதய பரிசோதனை நடத்த வேண்டும் என பேரறிவாளன் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 7.30 மணியளவில் பேரறிவாளனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறியும் எக்கோ பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் பத்து நிமிடங்களில் மருத்துவ பரிசோதனை முடிந்ததால் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+