அதிமுகவினர் வன்முறை: திருச்சியில் 'பெரியார் பேட்டி' போஸ்டரால் பரபரப்பு
திருச்சி: ஜெயலலிதா ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, பெரியார் பேட்டியளிப்பதாக திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, 'விடுதலை' நாளிதழில் தந்தை பெரியார் விமர்சனம் செய்துள்ளதாக திருச்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
'பெரியார் பேசினால்...?' எனும் தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ''ஜெயலலிதா ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபடும் அ.தி.மு.க. காலிகள் குறித்து உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு, ''சமுதாய ஒழுக்கக் கேடாகப் போனதற்கு காரணம், ஒருவன் அயோக்கியத்தனம் செய்கிறான் என்றால் அதை கண்டிக்க வேண்டுமென்று தோன்றாததுதான்!'' என்றும் எழுதப்பட்டுள்ளது.
பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்-திருச்சி எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரின் கடைசியில், 'பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 27.01.1957 விடுதலை' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போஸ்டர்கள் ஒட்டி தங்கள் எதிர்ப்பை காட்டியது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்நிலையில், பெரியார் பேசினால் எனும் பெயரில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications