நடுக்குப்பத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும் - முதல்வர் ஓபிஎஸ்
கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் நிரந்தர மீன்சந்தை அமைக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதல்வர் இதனை அறிவித்துள்ளார்.
சென்னை: வன்முறையின் போது தீக்கிரையான நடுக்குப்பத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 70 லட்சம் ரூபாய் செலவில் இந்த புதிய மீன் சந்தை அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் ஆகியோர் காயமடைந்தனர்.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான வாகனங்கள் சூறையாடப்பட்டன. சென்னை நடுக்குப்பம் பகுதியில் இயங்கிய மீன் மார்க்கெட் மற்றும் மீனவர்களின் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மீண்டும் அங்கு வியாபாரம் செய்யும் வகையில் மீன் சந்தை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் "வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். நடுக்குப்பம் தெற்கு பகுதியில் தற்காலிக மீன்மார்க்கெட் அமைக்கப்படும்.
சென்னை நடுக்குப்பத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் நிரந்தர, நவீன மீன் சந்தை அமைக்கப்படும்". இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் அறிவித்துள்ளார்.மேலும் ஓரிரு நாட்களில் நடுக்குப்பத்தில் தற்காலிக மீன் சந்தை அமைக்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications