நாயை காணவில்லை... மனமுடைந்த சென்னை பெண் தீக்குளித்து தற்கொலை
சென்னை : தான் ஆசையாக வளர்த்து வந்த நாயைக் காணவில்லை என்ற சோகத்தில் சென்னைப் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை கொருக்குபேட்டை ரங்கநாதம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி ஷர்மிளா (35). இவர்களது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போய் விட்டதாம்.
ஆசையாக வளர்த்த நாயைக் காணவில்லையே என மன வருத்தத்தில் இருந்துள்ளார் ஷர்மிளா. இந்நிலையில், நேற்று முந்தினம் வீட்டில் யாருமற்ற நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஷர்மிளா.
ஷர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு ஷர்மிளா உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ஷர்மிளாவின் மரணம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications